மலேசியாவில் தனது வணிகத்தை விரிவு படுத்த FedEx திட்டம்!
- Shan Siva
- 31 May, 2024
பன்னாட்டு விரைவு போக்குவரத்து நிறுவனமான FedEx, மலேசியாவில் தனது வணிகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
FedEx கார்ப் தலைவரும், ஏர்லைன்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரிச்சர்ட் ஸ்மித்துடனான தனது சந்திப்பின் போது இது பகிரபட்டதாக அவர் கூறினார்.
நேற்று புத்ராஜெயாவில் FedEx கார்ப் தலைவருடனான மரியாதை நிமித்த சந்திப்பு நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
"FedEx தற்போது மலேசியாவில் வாரந்தோறும் 30 விமானங்களை இயக்குகிறது, 220 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள அதன் உலகளாவிய நெட்வொர்க்குடன் உள்ளூர் தொழில்களை இணைக்கிறது என்று அவர் கூறினார்.
மேலும், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை (JS-SEZ) FedEx ஒரு குறிப்பிடத்தக்க எதிர்கால பொருளாதார வளர்ச்சி ஒத்துழைப்பாகக் கருதுகிறது என்று அவர் கூறினார்.
FedEx என்பது மலேசியாவில் 1993 ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து, இ-காமர்ஸ் மற்றும் வணிகச் சேவைகள் ஆகிய துறைகளில் நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *