பீடுநடை போடும் மலேசிய பொருளாதாரம்

top-news
FREE WEBSITE AD

மலேசியாவை ஆசியப் பொருளாதாரத் தலைவராக நிலைநிறுத்துவதற்கு, பொருளாதாரக் கட்டமைப்பு மிகவும் தேவைப்படுகிறது. அவ்வகையில் தொழிலாளர் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து புதுமை, தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்திற்கு மாற்றம் அடைய மலேசியா அதிக உற்பத்திகளையும் அனைத்துலக நிறுவனங்களின் பங்குகளையும் 2024ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியில் கொண்டு வந்துள்ளது எனலாம். தொழில்துறைக்கு புத்துயிர் அளித்துள்ளதோடு வலுவான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்களையும் சேவைகளையும் ஆதரித்துள்ளது.மலேசியாவிற்கு ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 6 விழுக்காட்டுக்கு உயர்த்த மலேசியா அண்டை நாடுகளுடன் பொருளாதார ஒருங்கிணைப்பை விரிவுபடுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதராத்தை ஆசிய நாடுகளுக்கிடையே மேம்படுத்த உள்ளூர் நிறுவனங்கள் ஆசியன் சந்தையில் போட்டியிட்டுக் கொண்டு 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மேம்படுத்தியுள்ளது. முக்கிய குறியீடான FTSE Bursa Malaysia KLCI (FBM KLCI) இந்த ஆண்டு இதுவரை 15 விழுக்காடு  அதிகரித்து ஆசிய நாட்டில் புர்சா மலேசியாவை சிறந்த சந்தையாக மாற்றியுள்ளது. 

மலேசியா ஒரு முதலீட்டு இடமாகத் திகழ இவ்வருடத்தில் தொழில்துறை பகுதிகளை உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்த பல முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 3.99 பில்லியன் நிகர வரவுடன் வர்த்தக மதிப்பில் 35 விழுக்காடு பங்களித்துள்ளனர். தேசிய ஆற்றல் மாற்றத் திட்டத்தின் வரைபடம் (என்இடிஆர்), 2030 புதிய தொழில்துறை யுக்தி (என்ஐஎம்பி) ஆகிய திட்டங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியை உருவாக்கியுள்ளதோடு முதலீட்டை ஈர்த்து,  வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. நமது வலுவான பொருளாதார அடிப்படைகளுடன் இணைந்து, மடானி பொருளாதாரக் கட்டமைப்பின் கீழ் உயர்தர முதலீட்டிற்கான பிராந்திய இடமாக மலேசியா உருமாறி வருகிறது என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

உள்ளூர் நிறுவனங்கள், சிறு, நடுத்தர நிறுவனங்களை அனைத்துலக ரீதியில் வளர்ச்சியடைய வைப்பதே 2024ஆம் ஆண்டின் பொருளாதார நோக்கமாக அமைந்துள்ளது. உள்நாட்டு நேரடி முதலீட்டை தொடர்ந்து அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.GEAR-uP என அறியப்படும், திட்டத்தின் முதல் கட்டமாக தொடர்ந்து அரசு இணைக்கப்பட்ட ஆறு முன்னணி நிறுவனங்கள் 120 பில்லியன் ரிங்கிட் (26.92 பில்லியன் டாலர்) உள்நாட்டு நேரடி முதலீடுகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 440 பில்லியன் ரிங்கிட் (98.68 பில்லியன் டாலர்) முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.  
இந்த முதலீடுகள் முதன்மையாக உயர் வளர்ச்சி உயர் மதிப்பு (HGHV)  தொழில்களான ஆற்றல் மாற்றம் துறை, மேம்பட்ட உற்பத்தி, குறிப்பாக ஸ்டார்ட்-அப்கள், நடுத்தர நிறுவனங்களின் அனைத்து வாழ்க்கைச் சுழற்சியில் முதலீடுகள் ஆகியவற்றில் மலேசியா வளர்ச்சியைக் கண்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், உலகளாவிய இஸ்லாமிய பொருளாதாரத்தின் முதன்மையாக மலேசியா விளங்கி வருகிறது. இஸ்லாமியப் பொருளாதாரத்தில் மலேசியாவின் முன்னணி நிலையை வலுப்படுத்த மகாஷிட் ஷரியா1 கொள்கையை மடானி பொருளாதார கட்டமைப்பிற்கு ஏற்ப, அரசாங்கம் இணைந்து செயல்டுபட்டு வருகிறது. மலேசியாவின் ஹலால் ஏற்றுமதியின் மதிப்பு 2023ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 55 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இவ்வாண்டும் 50 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியுள்ளது. உணவு, பானங்கள் (F&B) வகை 29.4 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஹலால் ஏற்றுமதியில் மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது. இது 2022இல் 27.84 பில்லியனுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட ஐந்து விழுக்காடு அதிகமாகும்.

இஸ்லாமிய நிதித் துறையில் நீதி, நேர்மை, சமூகப் பொறுப்பு போன்ற இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் முதலீட்டு கொள்கைகள் மலேசியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அந்தக் கொள்கைகள் யாவும் முஸ்லிம் அல்லாத நாடுகளால் பரவலாக ஊக்குவிக்கப்படும் நுளுழு (சுற்றுச்சூழல், சமூக, நிர்வாகம்) கொள்கைகளுக்கு ஏற்ப உள்ளதால் மலேசியாவின் பொருளாதாரம் இஸ்லாமியப் பொருளாதார ரீதியிலும் 2024ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்துள்ளது.
ஹலால் துறையின் 2030இன் திட்டம் (HIMP 2030) மூலம், 2030க்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) 75.2 பில்லியன் அல்லது 11 விழுக்காடு ஹலால் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு வாய்ப்புகளை ஏற்படுத்த மலேசிய நிறுவனங்கள் இணக்கம் கொண்டுள்ளன.

மலேசியாவின் பொருளாதாரம் குறு, சிறு, நடுத்தர முறைசாரா துறைகளின் வளர்ச்சியின் வழி மேலோங்கி வருகிறது. மடானி பொருளாதார வளர்ச்சியின் முன்னெடுப்பாக 2024ஆம் அண்டில் GrowBiz  என்ற திட்டம் ளுஆநு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்ட ஒரு முன்முயற்சியாகும். இது மைக்ரோ தொழில்முனைவோர் வணிக மேம்பாட்டுத் திட்டத்தின் (BizME) கீழ், வணிக வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக  குஸ்கோப்பால் ஆதரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சி திட்டமாகும். GrowBiz திட்டத்தில் இவ்வருடத்தில் 110 குறு தொழில்முனைவோர் தங்கள் போட்டித்திறனை மேம்படுத்தவும் அதிகரிக்கவும் வெற்றிகரமாக வழிகாட்டப்பட்டுள்ளனர். தொழில்முனைவோரின் நலன்கள், கொள்கை மாற்றங்கள், வணிக நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்களுடன் டிஜிட்டல் மாற்றம், சுற்றுச்சூழல், சமூகம், ஆளுகை (ESG) நடைமுறைகள், நிதி மேலாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் குறு, சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு கற்றுக் கொடுக்க மடானி அரசாங்கம் இத்தகைய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், அரசாங்கத்தால் வழங்கப்படும் திட்டங்கள், முன்முயற்சிகளை முழுமையாகப் பயன்படுத்தவும் தொழில் முனைவோர் வலுவாக ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும், பல்வேறு அமைச்சுகளையும், நிறுவனங்கள்,  குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (PMKS) ஆதரவளிக்க இந்த ஆண்டு 275 திட்டங்களை வழங்கியுள்ளதோடு இத்திட்டத்திற்காக மொத்த ஒதுக்கீடாக 15.1 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது. இதன் வழி, 479,758 குறு, சிறு, நடுத்தர வர்த்தகர்கள் இவ்வருட இறுதிக்குள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *