மாற்றப்படும் அரசின் பொதுச் செயலாளர்கள்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப் 4: உயர்மட்ட சிவில் சர்வீஸ் பதவிகளை மாற்றியமைத்ததைத் தொடர்ந்து, பல பொதுச் செயலாளர்கள் தங்கள் அமைச்சிலிருந்து மாற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ லோக்மான் ஹக்கீம் அலி, செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றலாகிறார்.

டத்தோஸ்ரீ ஹஸ்னோல் ஜாம் ஜாம் அஹ்மட், பொதுப்பணி அமைச்சிலிருந்து தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு மாறுவார்.

டத்தோஸ்ரீ சூரியானி அஹ்மட் தற்போது தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சிலிருந்து,சுகாதார அமைச்சிக்கு தலைமை தாங்குவார்.

உள்துறை அமைச்சின் Datuk Ruji Ubi கல்வி அமைச்சுக்கு மாற்றப்படுகிறார்.

தற்போதைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசாஃப் மனித வள அமைச்சுக்கு மாறுவார்.

டத்தோ அவாங் அலிக் ஜெமன் உள்துறை அமைச்சின்ன் புதிய பொதுச் செயலாளராக இருப்பார். தற்போது பிரதமர் துறையின் மூத்த துணைச் செயலாளராக உள்ளார்.

இன்று, புதன்கிழமை (செப்டம்பர் 4) அறிவிப்புகளை வெளியிட்ட அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், மூத்த துணைப் பொதுச்செயலாளராக டத்தோ அப்த் ஷுக்கோர் மஹ்மூத், அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவாக (ICU) டத்தோ நிக் நசருதீன் முகமட் ஜவாவி நியமனம் செய்யப்பட்டதாக அறிவித்தார்.

இயக்குநர் ஜெனரல், டத்தோஸ்ரீ அஸ்மான் இப்ராஹிம் பொதுப்பணி அமைச்சகத்தின் பொதுச் செயலாளராகவும், ரஸ்மான் அபு சாமா பொது தனியார் கூட்டாண்மை பிரிவு இயக்குநர் ஜெனரலாகவும் உள்ளனர்.

இவர்களது நியமனம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) முதல் அமலுக்கு வருகிறது.

சிவில் சேவையை சீர்திருத்தும் நோக்கில் புதிய நியமனங்கள் மற்றும் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஷம்சுல் அஸ்ரி தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *