தீவிரமாகும் வானிலை... SOPயை மறு பரிசீலனை செய்ய அமைச்சு உத்தரவு!
- Shan Siva
- 26 Sep, 2024
புத்ராஜெயா, செப் 26: இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு (NRES) வானிலை தகவல், ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கைகளைத் தயாரித்து பரப்புவதற்கான SOPயை மறுபரிசீலனை செய்ய மலேசிய வானிலை ஆய்வுத் துறைக்கு (METMMalasia) அறிவுறுத்தியுள்ளது.
அடிக்கடி வானிலை தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவல் மற்றும் எச்சரிக்கைகளை மிகவும் திறம்பட பரப்புவதில் தகவல் தொடர்பு அம்சத்தை மேம்படுத்தவும் மெட்மலேஷியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது தெரிவித்தார்.
தற்போதைய வானிலை குறித்து பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருப்பதை உறுதிசெய்வதற்காகவும், அதே நேரத்தில் தேவையற்ற சம்பவங்களைத் தவிர்க்கவும் இது உதவும் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த வாரம் தொடங்கிய பருவமழை மாற்றக் கட்டம் நவம்பர் தொடக்கம் வரை தொடரும். மேலும், இது மே 17 முதல் நிலவும் தென்மேற்கு பருவமழையின் முடிவைக் குறிக்கிறது.
பருவமழை மாற்றக் கட்டத்தில், நாடு பல்வேறு திசைகளில் இருந்து பலவீனமான காற்றைப் பெறும் என்று நிக் நஸ்மி கூறினார்.
இந்தச் சூழ்நிலையானது பொதுவாக குறுகிய காலத்தில் பலத்த மழை மற்றும் பலத்த காற்றைக் கொண்டு வரும். இடியுடன் கூடிய மழை பெய்யும்.
எனவே, இத்தகைய காலகட்டத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *