2025ஆம் ஆண்டில் சிகரெட் புகையிலிருந்து விடுபட வேண்டும்-பிரெஸ்மா!
- Muthu Kumar
- 06 Nov, 2024
கோலாலம்பூர், நவ.6-
2025ஆம் ஆண்டில் சிகரெட் புகையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உறுதிப்பாட்டை மலேசிய முஸ்லிம் உணவக முதலாளிமார்கள் சங்கம் (பிரெஸ்மா) கொண்டிருப்பதாக அதன் தலைவர் டத்தோ ஜவஹர் அலி தய்யூப் கான் தெரிவித்தார். இது உண்மையில் உணவகங்களில் புகை பிடிக்க வாடிக்கையாளர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கு பதிலளிப்பதற்கான ஒரு துல்லியமான அணுகுமுறையாகும்.
தன்னுடன் உறுப்பியம் கொண்டுள்ள அனைத்து உணவகங்களிலும் சிகரெட் விற்பனையை நிறுத்தி சுகாதார அமைச்சுடன் நன்கு ஒத்துழைக்க பிரெஸ்மா விரும்புகிறது.இது உணவகங்களில் புகை பிடிக்கும் வாடிக்கையாளர்களுக்கிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும். இந்த கடப்பாட்டை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
உணவக உரிமையாளர்களில் 50 விழுக்காட்டினர் இதுவரை சிகரெட் விற்காமல் இருக்கின்றனர். சிகரெட் விற்காமல் இருப்பதால் சுகாதாரம் மற்றும் சுத்த ரீதியில் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பதால் நாம் அதைத் தொடங்குவோம் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது டத்தோ ஜவஹர் அலி குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *