வேட்டையன் இசை வெளியீட்டு விழா வரும் செப் 20 தேதியில்- குட்டிக்கதை சொல்லலாமா!

top-news
FREE WEBSITE AD

ஜெய் பீம் திரைப்படம் இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
அதற்கு முன்னதாக வரும் 20ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது

இந்தப் படத்திலிருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட 'மனசிலாயோ' பாடல் இணையத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது. நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு பலரும் 'மனசிலாயோ' பாடலை வைத்து ரீல்ஸ் வெளியிட்டார்கள்.  கூலி பட குழுவினருடன் இந்த பாடலுக்கு ரஜினி ஆட்டம் போட்டு வைப் செய்திருந்தார்.,

இதனிடையே, 'வேட்டையன்' படம் மற்றும் 'மனசிலாயோ' பாடல் குறித்து அனிருத் பேசியிருக்கிறார். அதில் 'ஜெய்பீம்' படம் ரொம்பவே பிடித்த படம். அந்தவகையில், ஞானவேல் சார் இந்தக் கதையை சொன்னபோது, ரஜினி சார் இப்படியொரு கதையில் நடிப்பது புதுமையாக இருந்தது என்று கூறியிருந்தார் அனிருத்.

மனசிலாயோ பாடல் மூலம் வேட்டையன் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில் வரும் 20ம் தேதி வேட்டையன் பட பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நேரு அரங்கத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. வேட்டையன் பட தயாரிப்பு நிறுவனமான லைகா தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் இதனை வெளியிட்டுள்ளது.

பொதுவாகவே ஆடியோ வெளியீட்டு விழாக்களில் நடிகர் ரஜினிகாந்த் பேசுவது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகும். குறிப்பாக அவரது குட்டிக்கதை ரொம்பவே பாப்புலர். ரஜினியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கூறி ஆர்ப்பாட்டம் செய்வார்கள் அவரது ரசிகர்கள். ஜெயிலர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது காக்கா கழுகு கதை இன்னமும் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் வேட்டையன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் குட்டிக்கதை சொல்ல தயாராகி வருகிறார் ரஜினிகாந்த்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *