10 ஆண்டுகள் கழித்து எஸ். ஜே. சூர்யா இயக்கப் போகும் கில்லர் திரைப்படம்!

- Muthu Kumar
- 03 Dec, 2024
எஸ் ஜே சூர்யா மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தன் தனித்துவமான உடல்மொழியால் தென்னிந்தியளவில் ரசிகர்களை வைத்திருக்கும் இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் வருகின்றன.இறுதியாக, இவர் நடிப்பில் வெளிவந்த சூர்யா சாட்டர்டேவில் நானிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
தமிழில், வீர தீர சூரன், எல்ஐகே ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.இந்த நிலையில், வேல்ஸ் பழகலைக்கழகத்தில் எஸ். ஜே. சூர்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது, கேம் சேஞ்சர் படத்தின் வெளியீட்டிற்குப் பின், புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும் படத்திற்குக் கில்லர் எனப் பெயரிட்டிருப்பதையும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக எஸ் ஜே சூர்யா கடந்த 2015 ஆம் ஆண்டு 'இசை' படத்தை இயக்கி, நடித்திருந்தார். 10 ஆண்டுகள் கழித்து எஸ். ஜே. சூர்யா மீண்டும் இயக்குநராவது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *