GLC நிறுவனத்தின் 200 ஊழியர்களுக்கு வெளிநாட்டில் ஆடம்பர விடுமுறை! தேசியக் கணக்கறிக்கை ஆணையம் விசாரணை!

top-news

நவம்பர் 5,

Pelaburan Hartanah Berhad எனும் GLC நிறுவனம் அதன் 200 ஊழியர்களுக்கு வெளிநாட்டில் ஆடம்பர விடுமுறையைக் கொண்டாடவிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என Masjid Tanah நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய கணக்கறிக்கை ஆணையமான PAC தலைவருமான Datuk Mas Ermieyati Samsudin வலியுறுதினார். இது தொடர்பாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் ஆடம்பரச் சுற்றுலா ரத்து செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது விசாரணையை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் RM 43.9 மில்லியன் இழப்பு ஏற்பட்ட அந்த GLC நிறுவனம் தற்போது ஆடம்பர விடுமுறையைக் கொண்டாடுவது மட்டுமின்றி தனியார் பள்ளிக்கு RM 50,000 நிதியைச் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமை அதிகாரி வழங்கியிருப்பதும், தலைமை அதிகாரி ஒருவருக்கு மூன்று மாத அடிப்படை சம்பளமான RM210,000 பணத்தை முன்கூட்டிய வழங்கியிருப்பது என சந்தேகத்திற்குரிய பல்வேறு நடவடிக்கைகளில் சம்மந்தப்பட்ட GLC நிறுவனம் மேற்கொண்டிருப்பதால் தணிக்கை ஆணையமும் கணக்கறிக்கை ஆணையமும் முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Kerajaan digesa siasat tatakelola Pelaburan Hartanah Berhad (PHB) termasuk bayaran khas RM210,000 kepada CEO dengan KPI 42%, serta isu percutian mewah dan sumbangan RM50,000, kata Datuk Mas Ermieyati.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *