ஷாருக்கான் நிறுவனத்தின் விஸ்கி உலகிலேயே சிறந்த மதுபானமாக தேர்வு!

- Muthu Kumar
- 01 Dec, 2024
நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான நிறுவனத்தின் விஸ்கி உலகிலேயே சிறந்த மதுபானம் என்ற பெயரைப் பெற்று இருக்கிறது.
DYAVOL என்ற பெயரின் கீழ் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மகன் ஆரியன் கான் ஆகிய இருவரும் ஒரு விஸ்கி நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.அண்மையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த மதுபானங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் ஷாருக்கானுக்கு சொந்தமான தியாவால் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி உலகின் சிறந்த ஸ்காட்ச் என்ற பெயரை பெற்றிருக்கிறது.
The Tasting Alliance என்ற அமைப்பு சார்பாக நியூயார்க் உலக மதுபான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டுக்கான போட்டி அண்மையில் நடந்தது. இந்த போட்டியில் இந்த துறை சார்ந்த பல்வேறு வல்லுநர்களும் இணைந்த ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.இந்தக் குழு பல்வேறு பிராண்டுகளின் மதுபானங்களை ஆய்வு செய்து அவற்றின் தரம், அவை தயாரிக்கப்படும் முறை மற்றும் அதில் இருக்கும் பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த மதுபானத்தை தேர்வு செய்கின்றனர்.
அந்த வகையில் நடப்பாண்டு ஷாருக்கானுக்கு சொந்தமான நிறுவனத்தின் மதுபானம் சிறந்த மதுபானம் என்ற தலைப்பின் கீழ் விருது பெற்றுள்ளது. தி இன்செப்ஷன் விருது பெற்றிருப்பது வாழ்க்கையில் மிகச் சிறந்த விஷயங்களை கவனத்துடனும் ஆர்வத்துடனும் உருவாக்கினால் அது சிறந்த பெயரை பெற்று தரும் என்ற நம்பிக்கைக்கு சான்றாக அமைந்துள்ளது என ஷாருக்கான் கூறியுள்ளார்.இந்த ஸ்கார்ட் ஹைலேண்ட், லோலேண்ட் மற்றும் தீவுப் பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 8 அரிய சிங்கிள் மால்டுளின் கலவைதான் இந்த ஸ்காட்ச்.
இவை பனிரெண்டு ஆண்டுகள் பழமையானவை. இவை டானி போர்ட் மற்றும் அரிதான மடாரியா பீப்பாய்களில் வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.கடந்த 2023 ஆம் ஆண்டில் தான் ஷாருக்கானுக்கு சொந்தமான மதுபான நிறுவனம் இந்த பிராண்டினை அறிமுகம் செய்தது.குளிர்ச்சி இல்லாத, வடிகட்டப்பட்ட, சிறந்த சுவை கொண்டதாக இந்த ஸ்காட்ச் அறியப்படுகிறது. டார்க் சாக்லேட், உலர்ந்த பழங்கள் மற்றும் ப்ளம்ஸ், வெண்ணிலா ஆகியவற்றின் பிளேவர்களை கொண்டிருக்கிறது.
இந்த விருது தொடர்பாக பேசி இருக்கும் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் இந்த மதிப்புமிக்க விருதை வெல்வது தங்களுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் எனக் கூறியுள்ளார்.பொதுவாகவே பாலிவுட் நட்சத்திரங்கள் திரைத்துறையை தாண்டி பல்வேறு துறைகளிலும் முதலீடு மேற்கொண்டு வருமானம் ஈட்டுகின்றனர். மேக்கப் அப், ஆடைகள், காலணிகள் போன்ற துறைகளில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *