லெபனானுக்கு ராணுவ வீரர்களைத் தொடர்ந்து அனுப்பி வரும்-காலிட் நோர்டின்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ. 9-

லெபனானில் இஸ்ரேலியர்களின் தாக்குதல் தீவிரமடைந்துவரும் வேளையில், அங்கிருந்து ஐநா இடைக்கால அமைதிப் படையினர் (யூனிஃபில்) வெளியேறும் சாத்தியம் ஏற்படலாம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்படும்போது அரசாங்கம் மாற்றுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் என்று தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்தார். ஆயினும், மற்ற நாடுகளைப் போலவே மலேசியாவும் இப்போதைக்கு அந்நாட்டுக்கு தனது ராணுவ வீரர்களைத் தொடர்ந்து அனுப்பி வரும் என்றும் அவர் கூறினார்.

அமைதிகாப்புப் பணிக்காக லெபனானுக்கு மலேசியா முதன்முறையாக ராணுவ வீரர்களை அனுப்பியபோது என்ன சூழ்நிலை நிலவியதோ அதே போன்ற சூழ்நிலைதான் இப்போதும் நிலவுகிறது என்றார்.நிலைமையைக் கண்காணிப்பதற்காக யூனிஃபில் அமைதி காப்புப் படையினரிடம் நாங்கள் தொடர்பில் இருந்து வருகிறோம். அமைதிக் காப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இதர நாடுகளுடனும் நாங்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார் காலிட்.

மலேசியாவின் மல்பாட் குழுவினர் மட்டும் தாக்குதலை எதிர்கொள்ளவில்லை. இந்தோனேசியா, அயர்லாந்து போன்ற இதர நாடுகளின் துருப்புகளும் இதே நிலையை எதிர்கொண்டு வருகின்றனர் என்று காலிட் கூறினார்.யூனிஃபில் அமைதி காப்புப் படையில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. தென் லெபனானில் அமைதியைப் பேணிவரும் பணியை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்று காலிட் குறிப்பிட்டார்.

ராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக ராணுவத்தினர் அங்கு அனுப்பப்படுகின்றனர். அமைதிகாப்புப் பணியை மேற்கொள்ளும் வேளையில் நேரிடக்கூடிய ஆபத்துகளையும் அவர்கள் உணர்ந்துள்ளனர். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர் என்றும் காலிட் சொன்னார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *