ஈப்போவில் நிகழ்ந்த நில அதிர்வுகளும் பலத்த வெடிச்சத்தமும் 'ஓரியோனிட்ஸ்' நிகழ்வு அல்ல!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 23-

ஈப்போவில் நேற்றுமுன்தினம் முற்பகல் 11.06 மணிக்கு நிகழ்ந்த நில அதிர்வுகளும் பலத்த வெடிச்சத்தமும் 'ஓரியோனிட்ஸ்' எனும் எரிநட்சத்திரக் கற்களின் பொழிவினால் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அதிர்வுகளும் வெடிச்சத்தமும் விண்ணிலிருந்து கொட்டிய எரிகற்களினால் விளைந்தவை என்று சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. அந்த தகவலை மலேசிய விண்வெளி முகமை மறுத்துள்ளது.

வால்நட்சத்திரத்திலிருந்து எரிகற்கள் வீழ்வது வழக்கமானது என்றபோதிலும், அவை தரைப் பகுதியில் தாக்கத்தை அல்லது சத்தத்தை ஏற்படுத்தாது. அத்தகைய எரிகற்களின் சிதறல்கள் காற்று மண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகி விடும். இதனால், எந்தவொரு நேரடிப் பாதிப்பும் ஏற்படாது என்று அந்த முகமையின் தலைமை இயக்குநர் அஸ்லிகாமில் நப்பியா தெரிவித்தார். அச்சிதறல்கள் பூமி மீது விழ நேர்ந்தாலும்கூட அவை சிறியதாக இருக்கும் என்பதால் நிலஅதிர்வுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றார்.

இப்போதைக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் பார்க்கும்போது விண்வெளியில் ஏற்பட்ட ஓர் அசாதாரண நிகழ்வுடன் இதனை ஒப்பிட முடியவில்லை. விண்கற்கள் விழுந்த இடம் அடையாளம் காணப்பட்டால் மட்டுமே அது உறுதியாகும் என்றார். 'ஓரியோனிட்ஸ்' எரிகற்கள் பொழிந்த காரணத்தினால்தான் ஈப்போ உள்ளிட்ட பல பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டதோடு பலத்த வெடிச்சத்தமும் கேட்டது என்று சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

செமோர், பேராக் ஸ்டேடியம், தஞ்சோங் ரம்புத்தான், கிளேபாங், ஜெலாப்பாங், தம்புன், சிலிபின் ஆகிய இடங்களும் அப்பகுதிகளில் அடங்கும்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *