12ஆவது மலேசியா திட்டத்தின் கீழ் அரசு இரண்டு புதிய நிதி அறிமுகம்-லீயு சின் தோங்!
- Muthu Kumar
- 07 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 7-
12ஆவது மலேசியா திட்டத்தின் கீழ் அரசாங்கம் உள்நாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு நிதி, வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு நிதி என இரண்டு புதிய நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை இரண்டும் உள்ளூர் முதலீட்டு வியூக நிதி, உயர் தாக்க நிதி ஆகியவற்றின் தொடர்ச்சியாகும் என்று முதலீடு, வர்த்தகம்,தொழில்துறை துணை அமைச்சர் லீயு சின் தோங் கூறினார்.
மடானி பொருளாதார திட்டம், 2030ஆம் ஆண்டு புதிய தொழில்துறை பிரதானத் திட்டம் ஆகிய அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைக்கு ஏற்ப இந்த நிதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக லீயு சின் தோங் தெரிவித்தார். ”இந்த இரண்டு நிதிகளும் நிறைவடைந்ததும், முடிவடைந்தன. மேலும் மொத்தம் 526 திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன”, என்று அவர் கூறினார். இந்த சான்றிதழைப் பெற அல்லது சரிபார்ப்பை மேற்கொள்ள சிறு, நடுத்தர தொழில்துறை உள்ளூர் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.
அதேபோல, 2030இன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு ஏற்ப உயர்தர அந்நிய நேரடி முதலீட்டைக் கவரும் முயற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டதாக,இன்று நடைபெற்ற மக்களைவைக் கேள்வி பதில் நேரத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *