கே.ஜி.எப் பாகம் 3 பற்றி தகவல் கொடுத்த கதையின் நாயகன் நடிகர் யஷ்!

top-news
FREE WEBSITE AD

நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கே.ஜி.எஃப். இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.

தாய் தந்தையரால் கைவிடப்பட்ட சிறுவன் எந்தவித ஆதரவும் இன்றி எப்படி மும்பைக்கே டானாக மாறுகிறார். பின் எப்படி கேஜிஎஃப் தங்க சுரங்கத்தை தன்வசமாக்கினார் என்பதை மையமாக வைத்து கதை நகர்கிறது.தடை செய்யப்பட்ட புத்தகம் குறித்து பத்திரிகையாளர் நடத்திய பேட்டியில் ராக்கி எனப்படும் டானின் கதையை கூறுவது போல் அமைந்துள்ளது. பின், அடுத்த பாகத்தை அப்புத்தகம் எழுதிய நபரின் மகனான பிரகாஷ் ராஜ் கூறுகிறார். தாயின் ஆசையை நிறைவேற்ற போராடும் மகனின் வாழ்க்கையாக அவர் இந்தக் கதையை உருவாக்கி இருப்பார்.

பாசம், வைராக்கியம், கோபம், வெறி, ரத்தம், சதை, குரூரம் என அனைத்து உணர்ச்சிகளையும் கலந்து வெளிப்படுத்தி, மக்களை ஈர்த்தது கேஜிஎஃப் திரைப்படம்.முதல் பாகம் வெளியாகி மெல்ல மெல்ல இந்தியா முழுவதுமுள்ள மக்களைக் கவர்ந்தது.

பின், இந்தப் படத்தின் 2ம் பாகம் வெளியாகி மாபெரும் வசூல் வெற்றி பெற்றது. மேலும், இந்தப் படம் முடியும் போது, 3ம் பாகத்திற்கான லீடும் கொடுத்தனர். இதனால், கேஜிஎஃப் படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இயக்குநர் பிரசாந்த் நீல் இப்படம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார்.

இவர், கேஜிஎஃப் படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸை வைத்து சலார் படத்தை எடுத்தார். இப்போது இந்த படத்தின் 2ம் பாகத்தை இயக்குவதில் மும்மரமாக இருக்கிறார். இதனால், கேஜிஎஃப் 3 படத்தை பற்றிய எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில், நடிகர் யாஷ்ஷும் டாக்ஸிக் மற்றும் ராமாயண கதை ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிவடைந்த பின் கேஜிஎஃப் 3 படத்தின் வேலைகள் தொடங்கும் என நடிகர் யஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய யஷ், நானும் இயக்குநர் பிரஷாந்த் நீலும் ஒப்புக் கொண்ட படங்களை முடித்துவிட்டு மீண்டும் கேஜிஎஃப் 3ம் பாகத்தில் இணைவோம். இந்தப் படம் குறித்து பிரசாந்த் நீலுடன் பேசினேன். அப்போது நாங்கள் இந்தப் படம் குறித்து ஆலோசித்தோம். சரியான நேரம் வந்தவுடன் இந்த மாபெரும் திட்டத்தை செயல்படுத்துவோம் எனக் கூறியுள்ளார்.

கேஜிஎஃப் திரைப்படத்தை நாங்கள் வணிகமயமாக்க விரும்பவில்லை. ஆனால், மக்கள் அதனை எங்களுக்கு அளித்தனர், இதுவொரு கல்ட் திரைப்படம். கேஜிஎஃப் 3ம் பாகத்திற்கான கதையை முன்னதாகவே இயக்குநர் தயாரித்துவிட்டார். அதனால் தான் 2ம் பாகத்திலேயே 3ம் பாகத்திற்கான லீடை கொடுத்தோம் என்றார். இதனால் தற்போது கேஜிஎஃப் 3ம் பாகத்திற்கான பேச்சு தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *