மாற்றுத்திறனாளியைத் தாக்கிய விவகாரம்... போலீஸ் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! - தேசிய போலீஸ் படைத் தலைவர் எச்சரிக்கை
- Shan Siva
- 31 May, 2024
சமீபத்தில் ஒரு ஹோட்டலில் மாற்றுத்திறனாளியான
இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவரை ஜோகூர் ரீஜெண்டின் போலீஸ் பாதுகாப்புக் குழுவில் உள்ள அதிகாரி ஒருவர் தாக்கியது உறுதி
செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர்
டான்ஸ்ரீ ரஸாருடீன் ஹுசைன் எச்சரித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பல
அதிகாரிகள் விசாரணையில் உதவ புக்கிட் அமானுக்கு வரவழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
இது ஒரு முழுமையான விசாரணை
நடத்தப்படுவதையும், சம்பந்தப்பட்ட
அனைத்து தரப்பினரும் தங்கள் அறிக்கைகளை வழங்குவதையும் உறுதிசெய்வதாகும் என்று அவர்
குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு விசாரணையிலும்
முதன்மையானது, எந்தவொரு குற்றவாளியும்
சட்டத்திலிருந்து தப்பாமல் இருப்பதை உறுதி செய்வதே. குற்றம் நிரூபிக்கப்பட்ட எந்த
அதிகாரி மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் எந்த சமரசமும் இருக்காது என்று அவர் தெரிவித்தார்.
நீதியை உறுதிசெய்து, மாற்றுத்திறனாளி உட்பட பொதுமக்களைப் பாதுகாக்கும் அதே
வேளையில்,
காவல் துறையினர் தங்கள் நேர்மையைக் காப்பதில் உறுதியாக
இருப்பதாகவும் ரஸாருடீன் கூறினார்.
முன்னதாக, ஜோகூர் ஆட்சியாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், மே 28 அன்று
கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த இந்தச் சம்பவத்தை முழுமையாக
விசாரிக்குமாறு காவல்துறையை வலியுறுத்தியதோடு, எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கை அல்லது அச்சுறுத்தலை தான் மன்னிக்கவில்லை
என்றும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி
வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *