கெடா - ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 8: இன்று காலை 8 மணி நிலவரப்படி கெடா மற்றும் ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மற்ற மூன்று மாநிலங்களில் நிலைமை முன்னேற்றத்தின் அறிகுறிகளைக் காட்டுகிறது.

கெடாவில், நேற்றிரவு 305 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 439 ஆக உயர்ந்துள்ளது. அனைவரும் இரண்டு மாவட்டங்களில் உள்ள நான்கு தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

குபாங் பாசுவில் 252 பேரும் பென்டாங்கில் 187 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று மாநில சிவில் பாதுகாப்புப் படையின் துணை இயக்குநர் சுஹைமி ஜைன் தெரிவித்தார்.

சுங்கை கெட்டில் (பாலிங்), சுங்கை குருன் (யான்), சுங்கை டிட்டி கெர்பாவ் (பெண்டாங்) மற்றும் சுங்கை பதங் தேராப் (கப்பாளா பத்தாஸ்) உட்பட கெடாவில் உள்ள ஒன்பது ஆறுகள் அபாய அளவைத் தாண்டிவிட்டதாக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை தெரிவித்துள்ளது.

கெடாவில் நாள் முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

ஜொகூரில், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் அஸ்மி ரோஹானி கூறுகையில், குளுவாங், பொந்தியாப் மற்றும் பத்து பஹாட் ஆகிய மூன்று நிவாரண மையங்களில் 601 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது நேற்று இரவு 582 ஆக இருந்தது.

10 மாவட்டங்களிலும் வானிலை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் பத்து பஹாட்டில் உள்ள சுங்கை செம்ப்ராங் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளது.

பேராக்கில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாறாமல் உள்ளது, கிரியன், தைப்பிங் மற்றும் ஹிலிர் பேராக் ஆகிய நான்கு நிவாரண மையங்களில் 297 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.  இன்று பிற்பகல் அனைத்து மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மெட்மலேசியா கணித்துள்ளது.

சிலாங்கூரில், கோம்பாக் மற்றும் கோலா சிலாங்கூரில் நேற்றிரவு 186 ஆக இருந்த வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆகக் குறைந்துள்ளது.  அவர்கள் மூன்று நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மலாக்காவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக இருந்தது, அவர்கள் எஸ்.கே. தெஹெல், ஜாசின் நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *