கால்நடை கழிவு செயலாக்க மையம் குறித்து மாநில அரசு கலந்துரையாடலை நடத்தும்! டத்தோஸ்ரீ சுந்தரராஜு!
- Muthu Kumar
- 24 Sep, 2024
தாசேக் குளுகோர், .24-
பன்றியின் கழிவை விடுவதால் சுங்கை கெரே ஆற்றில் ஏற்பட்ட தூய்மைக்கேடு பிரச்சிைைனக்குத் தீர்வு காணும் முயற்சியில் கம்போங் செலாமாட்டில் கால்நடைகளின் கழிவுகளை செயலாக்கம் செய்யும் மையம் நிர்மாணிப்பு தொடர்பில் மாநில அரசு கலந்துரையாடலை நடத்தும்.
சுங்கை கெரே ஆற்றுத் தூய்மைக்கேடு உட்பட ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அப்பகுதியில் குடியிருக்கும் மக்களிடமிருந்து தமக்கு நிறைய புகார்கள் கிடைத்ததாக பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் செயற்குழுத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுந்தரராஜு தெரிவித்தார்.கால்நடைகளின் கழிவுச் செயல்முறை மையம் ஒரு தேர்வாக இல்லாமல் விரைவாக மேற்கொள்ள வேண்டிய ஒரு தேவையாக இருக்கிறது. அது தூய்மைக்கேட்டுப் பிரச்சினையை மட்டும் தீர்க்காமல் வெளியாகும் கழிவுகளை எரிவாயுவாக மாற்றித் தொடர்ந்து பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய மின்சக்தியையும் தருவிக்கும்.
இது ஒன்றும் பன்றி வளர்ப்பவரைச் சிரமப்படுத்த வேண்டும் என்பதில்லை, மாறாக ஆற்றைத் தூய்மைக்கேடாக்காமல் நிபுணத்துவ முறையில் வர்த்தகத்தை மேற்கொள்ள நாங்கள் உதவுவதற்கு விரும்புகிறோம். இதை ஓர் உயிர்வாயு அமைப்பை உருவாக்குவதன் மூலம் செயல்படுத்த முடியும், அதாவது கால்நடை கழிவுகளைப் பதப்படுத்தும் மையம் இந்த கழிவுகளை ஒரேயடியாக ஆற்றுக்குக் கொண்டு போகாது. தொடக்கமாக இப்பரிந்துரை மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் முன்வைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தச் சம்பந்தப்பட்ட இலாகாவுடன் இணைந்து இலக்குகள் குறித்து விவாதிக்கப்படும் என்று சுங்கை கெரே ஆற்றுக்கு முன்பிருக்கும் பன்றி வளர்ப்புத் தோட்டத்தைக் கண்ணோட்டமிட்ட பின்னர் நடைபெற்றச் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய போது டத்தோஸ்ரீ சுந்தரராஜு குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *