மோகனைத் தோற்கடித்து பெரிய தவறு செய்துவிட்டார்கள்! - ம.இ.கா முன்னாள் தலைவர் டாக்டர் சுப்ரமணியம்
- Shan Siva
- 09 Jul, 2024
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 9:: ம.இ.காவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் சமூகத்தின் மீது பற்று கொண்ட சில மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர். அவரைப் புறக்கணித்து மஇகா பிரதிநிதிகள் பெரும் தவறிழைத்துள்ளனர் என்று ம.இ.கா முன்னாள் தலைவர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மோகன் இந்திய சமூகத்திற்கு, குறிப்பாக தமிழ்ப் பள்ளிகளுக்கு மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மலேசிய இந்திய கால்பந்து சங்கத்தை ஒரு சக்திவாய்ந்த விளையாட்டு நிறுவனமாக உருவாக்கினார். அது ஒருமுறை மலேசியா பிரீமியர் லீக் ரன்னர்-அப் ஆக முடிந்தது FMT ஊடகத்திற்கு வழங்கிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மஇகா தலைவர்களும், உறுப்பினர்களும் மோகன் கட்சியை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வார்கள் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு 51 வயதுதான் ஆகிறது. இன்னும் நிறைய செய்வார். அவருக்கு உரியதை ம.இ.கா செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தாம் கட்சித் தலைவராக இருந்தபோது, இந்து கோவில்கள் அழிக்கப்படும்போது இந்திய சமூகத்திற்காக மோகன் நிற்பதை நேரில் பார்த்ததாக சுப்ரமணியம் கூறினார்.
சமூகத்தை மேம்படுத்தும் ஆர்வத்தால் உந்தப்பட்ட மிகவும் பயனுள்ள தலைவர்கள் கட்சிக்கு உண்மையில் தேவை. இந்திய சமூகத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர் என்பதால் மோகனின் தோல்வி கட்சிக்கும், சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்.
சமூகம் தொடர்பான பல பிரச்சினைகளில், அவர் முன்னணியில் இருந்தார். ஒரு இந்து கோவில் இடிக்கப்படும்போது, மோகன் போராட்டக்காரர்களுக்கு தலைமை தாங்கினார், என்று ஜூன் 2015 முதல் 2019 வரை மஇகா தலைவராக இருந்த சுப்பிரமணியம் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *