இவ்வாண்டு வர்த்தக குற்றப் பிரிவின் மோசடி மதிப்பு வெ. 5 கோடியே 13 லட்சம்!

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

கோலாலம்பூர், மார்ச் 6-

புக்கிட் அமான் வர்த்தக குற்றப் பிரிவு துறை, இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து பெறப்பட்ட மொத்த புகார்கள் 9,431 என்று அதன் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்தார்.இந்த புகார்கள் தொடர்பில் கிட்டத்தட்ட 5 கோடியே 13 லட்சத்து 3ஆயிரத்து 643 வெள்ளியை பொதுமக்கள் இழந்துள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாண்டு மார்ச் 4ஆம் தேதி வரையில் 48 சதவீதம் வர்த்தக குற்றச் செயல்கள் உயர்ந்துள்ளதாகவும் கடந்தாண்டு 6,354 புகார்கள் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இவ்வாண்டு தொலைத் தொடர்பு குற்றவியல் மோசடி தொடர்பில் 3,706 புகார்கள் பெறப்பட்டன. இதன் இழப்பு 9கோடியே 13 லட்சம் வெள்ளி ஆகும். இணையதள மோசடி சம்பந்தமாக 1,690 புகார்கள் பெறப்பட்டன. இதன் இழப்பு 1 கோடியே 20 லட்சம் வெள்ளி ஆகும்.

முதலீட்டு மோசடி தொடர்பில் 1,338 புகார்கள் பெறப்பட்டன. அதன் இழப்பு 24 கோடியே 16 லட்சம் வெள்ளி. சட்டவிரோத வட்டி தொடர்பில் 926 புகார்கள் பெற்றப்பட்டன. இதன் இழப்பு 66 லட்சம் வெள்ளி. நிதி மின்னியல் இணையதள மோசடியில் 492 புகார்கள் பெறப்பட்டன. அதன் இழப்பு 96 லட்சம் வெள்ளி, காதல் மோசடியில் 170 புகார்கள். இதன் இழப்பு 76 லட்சம் வெள்ளி என்று டத்தோஸ்ரீ ரம்லி தெரிவித்தார்.

இவ்வாண்டு மார்ச் 4ஆம் தேதி வரையில் மொத்தம் 8,322 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இதன் இழப்பு 36 கோடியே 87 லட்சம் வெள்ளி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.ஒவ்வொரு நாளும் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். போலீஸாரும் பொதுமக்களுக்கு எல்லா வகைகளிலும் சிறப்பான வழிகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் பொதுமக்கள் ஏமாற்றப்படுவது மிக வருத்தமளிப்பதாக அவர் சொன்னார்.

மற்றொரு சம்பவத்தில் செந்தூல் வட்டாரத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி ஒரு சீன ஆடவர் விலையுயர்ந்த சொகுசுக் கார் வாங்கித் தருவதாகக் கூறி 24 லட்சம் வெள்ளியை ஏமாற்றியுள்ளதாக புகார் பெறப்பட்டதாக அவர் கூறினார்.

2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அந்த கார் விற்பனை செய்யும் ஆடவர் லிம் வொய் ஹெங் (வயது 34), வெளிநாட்டிலிருந்து ஒரு சொகுசுக் காரை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக அதேபோன்ற காரை பூச்சோங்கிலிருந்து கொண்டு வந்து சுங்கத்துறை பாரங்களைக் காட்டி ஏமாற்றியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் புகார் செய்ததாக டத்தோஸ்ரீ ரம்லி தெரிவித்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு 15ஆம் தேதி ஜூன் மாதம் 18 முறை 24 லட்சம் வெள்ளியை ஒரு கம்பெனியின் வங்கிக் கணக்கில் செலுத்தியதாக அவர் கூறினார். இச்சம்பவம் தொடர்பில் இந்த நபரை யாராவது கண்டால் உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். மேலும் இந்த ஆடவர் மூலம் யாராவது ஏமாற்றப்பட்டிருந்தால் புகார் செய்யுமாறும் அவர் கூறினார்.முகநூல் அல்லது வாட்ஸ் ஆப் இணையதளம் மூலம் வெளியாகும் முதலீடுகளை நம்ப வேண்டாம் என்றார் அவர்.

இப்போது gentle edge எனும் அகப்பக்கத்தில் வெளியாகும் முதலீடுகள் போலியானவை. அதில் முதல் கட்டமாக 1,200 வெள்ளியை செலுத்தினால் மாதம் 1 லட்சம் வெள்ளி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பொய்யான தகவலாகும்.பொதுமக்கள் தயவு செய்து இதுபோன்ற இணையதளங்களில் வரும் முதலீடுகளை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Pengarah JSJK Bukit Aman, Datuk Seri Ramli Mohamed Yoosuf, melaporkan sebanyak 9,431 aduan jenayah komersial diterima sejak awal tahun ini, dengan kerugian RM51.3 juta. Kes jenayah meningkat 48% berbanding tahun lalu. Beliau menggesa orang ramai berwaspada terhadap penipuan kewangan dan pelaburan dalam talian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *