பண்டிகை காலங்களில் தக்காளி விலையை உயர்த்தி லாபம் ஈட்ட நினைக்கும் மொத்த வியாபாரிகள்!

top-news
FREE WEBSITE AD

தெலுக் இந்தான், செப்.25-

தீபாவளி பண்டிகை மற்றும் நவராத்திரி திருவிழா நெருங்கும் வேளையில் இங்குள்ள பெரிய காய்கறி சந்தையில் நேற்று வரை கிலோ 4.00 வெள்ளிக்கு விற்றுவந்த தக்காளி ஒரே நாளில் (24.9.2024 அன்று) கிலோவுக்கு ஒரு வெள்ளி விலையேற்றம் கண்டு சில்லறையில் கிலோ 5.00 வெள்ளியாக விற்கப்படுகின்றது என பல்லாண்டுகளாக அங்கு காய்கறி விற்பனை செய்து வரும் அம்புரோஸ் சந்தனசாமி தெரிவித்தார்.

பண்டிகை காலங்களைத் தவிர்த்து மற்ற நாள்களிலும் இந்திய சமூகத்தினர் சமையலுக்கு மற்ற காய்கறி இல்லாமல் சமைத்து விடலாம். ஆனால், தக்காளிப்பழம் இல்லாத உணவு சமைப்பது இல்லத்தரசிகளுக்கு திருப்திகரமாக இருக்காது என்றார்.

அந்த வகையில், தக்காளி விலை உயர்வு தெலுக் இந்தான் வட்டார பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், நாட்டில் தக்காளி அதிகமாக பயிரிடும் விவசாயத் தளம் என்பது கேமரன் மலையாகும். அங்கு மற்ற காய்கறிகள் முள்ளங்கி, கடுகு கீரை, பீன்ஸ் காய், முட்டைகோஸ் மற்றும் கத்திரிக்காய் பயிரிடப்படுகின்றன. தக்காளியை தவிர்த்து இக்காய்கறிகள் விலையேற்றப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

விசேஷ தினங்களில் மட்டுமே மொத்த வியாபாரிகள் தக்காளியை குறிபார்த்து விலையால் அடிக்கின்றனர். மேலும் கேமரன் மலை விவசாயிகளை தங்களுக்குள் கட்டுப்படுத்திக் கொள்கின்றனர் என்னும் புகார் பல காலமாக பரவலாகப் பேசப்படுகிறது. இது உண்மையா என்பது தெரியவில்லை என அவர் கூறினார்.

எங்களைப் போன்று காய்கறி விற்பனை செய்துவரும் சில்லறை வியாபாரிகள் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது மனிதர்கள் செய்யும் கண்கட்டு வித்தை என்பதால் பாசீர் பெர்டாமார் சட்ட மன்ற உறுப்பினரும், மாநில உள்நாட்டு வாணிக அமைச்சின் ஆட்சிக்குழு உறுப்பினருமான வூ காஹ் லியோங் இந்த விவகாரத்தில் தலையிட்டால் ஒருவேளை பொதுமக்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் பண்டிகை காலங்களில் தான் தக்காளி விலையை உயர்த்தி தங்களுடைய அதிக இலாப நோக்கத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற காலங்களில் தான் காய்கறி சில்லறை வியாபாரிகள் நாலு காசு பார்க்க முடிகிறது. அந்த சூழ்நிலையில், மொத்த வியாபாரிகள் நிர்ணயம் செய்யும் விலையை ஏற்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றோம் என்றார் அவர். கேமரன் மலை விவசாயிகளை மொத்த வியாபாரிகள் தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதாக கூறப்படும் தகவலின்படி அதன் தன்மையும், திறனையும் உள்நாட்டு வாணிக அமைச்சு சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *