மகளை இன்னும் கண்டுபிடிக்காதது ஏன்? அதிகாரிகளுக்கு இந்திராகாந்தி கேள்வி!

top-news
FREE WEBSITE AD


தம்முடைய மகள்‌ பிரசன்னா டிக்சா காணாமல்‌ போய்‌ பதினைந்து ஆண்டுகள்‌. ஆகிவிட்டாலும்,‌ அவளைக்‌ கண்டுபிடிப்பதற்கு. அதிகாரிகள்‌ இன்னும் அக்கறை காட்டாமல்‌ இருப்பது குறித்து பாலர்‌ பள்ளி ஆசிரியையான எம்‌.இந்திராகாந்தி ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம்‌ ஆண்டில்‌ இந்திராவின்‌ முன்னாள்‌ கணவர்‌ முகமது ரிடூவான்‌ அப்துல்லா, அப்போது பதினோரு மாதக்‌ குழந்தையாக இருந்த பிரசன்னாவுடன்‌            தலைமறைவானார்‌. இந்திராவின்‌ ஒப்புதல்‌ பெறாமல்‌ அக்குழந்தையை இஸ்லாத்திற்கும்‌  அவர்‌ மதம்‌ மாற்றினார்‌.                            ்‌

இந்திராவிடம்‌ பிரசன்னாவை திரும்ப  ஒப்படைக்க மறுத்ததன்‌ மூலம்‌ நீதிமன்றத்தை  அவமதித்தக்‌ குற்றத்திற்காக ரிடுவானைக்‌ கைது செய்யும்படி கடந்த 2016ஆம்‌ ஆண்டில்‌ போலீசாருக்கு நீதிமன்றம்‌ உத்தரவிட்டது.  தங்களின்‌ மூன்று குழந்தைகளைப்‌  பராமரிக்கும்‌ முழுஉரிமையையும்‌ இந்திராவுக்கு அது வழங்கியது.                          

இதனைத்‌ தொடர்ந்து, ரிடுவானைக்‌ கண்டுபிடித்து அவரிடமிருந்து பிரசன்னாவை மீட்கக்கோரி சட்டத்துறைத்‌ தலைவரின்‌ அலுவலகத்திற்கு ஈப்போ உயர்நீதிமன்றம்‌         உத்தரவிட்டது. இது குறித்து நேற்று கருத்துரைத்த இந்திரா, போலீசார்‌ இதுவரை முறையான புலன்விசாரணை  நடத்தியதாகவோ, ஓர்‌ உறுதியான ஆதாரத்தைக் கண்டுபிடித்ததாகவோ தெரியவில்லை என்றார்‌.

ரிடுவானைக்‌ கண்டுபிடிக்க போலீசார்‌  மேற்கொண்ட முயற்சிகள்‌ பற்றி ஒவ்வாரு. மூன்று மாதங்களுக்கும்‌ ஒரு முறை அபிடவிட்‌ மனுவைத் தாக்கல்‌ செய்யும்படி சட்டத்துறைத்‌ தலைவரின்‌ அலுவலகத்திற்கு ஈப்போ உயர்நீதிமன்றம்‌ உத்தரவிட்டிருந்தது. 

ஆனால்‌, கடந்த நான்கு ஆண்டுகளில்‌ போலீஸ்துறை சமர்ப்பித்த அபிட‌விட் மனுக்களில்‌ எந்த உருப்படியான விவரங்களும்‌ இல்லை.  ரிடுவானின்‌ இருப்பிடத்தைக்‌ கண்டுபிடிக்க அது எந்த வகையிலும்‌ உதவவில்லை என்று இந்திரா தெரிவித்தார்‌.

“2009ஆம்‌ ஆண்டிலிருந்து என்னுடைய மகளைப் பார்க்கவில்லை. அவளுக்கு இப்போது பதினாறு வயது ஆகிவிட்டது. விரைவில்‌ அவள்‌ பதிஎனட்டு வயதை அடைந்து விடுவாள்‌. அதிகாரிகள்‌ எதற்காக இன்னும்‌ காத்துக்‌கொண்டிருக்கின்றனர்‌?'' என்று நேற்று    வெளியிட்ட அறிக்கையொன்றில்‌ இந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *