சில மணி நேரத்தில் பல மில்லியன்-டிரெண்டிங்கில் விடாமுயற்சி டீஸர்!

top-news
FREE WEBSITE AD

 அஜீத் ரசிகர்களுக்கு நேற்று மாலை  வெளிவந்த அப்டேட் சமூக வலைதளத்தையே திணறடிக்கச் செய்து,இரவு விடாமுயற்சி டீஸர் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று இரவு டீஸரைப் பார்க்காமல் தூக்கம் வராது என்று  காத்துக் கொண்டிருந்த அஜீத் ரசிகர்களுக்கு விடாமுயற்சி படத்தின் டீஸர் வெளியாகி நேற்றைய தூக்கத்தினைத் தொலைத்தது. துணிவு படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அடுத்த படமான விடாமுயற்சி படத்தின் பணிகள் தள்ளிக் கொண்டே சென்றது. இந்நிலையில் நேற்றிரவு திடீரென வந்த டீஸரால் அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இன்று  நிலவரப்படி விடாமுயற்சி டீஸர் யூடியூப்பில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் நம்.1 இடத்தில் உள்ளது. படத்தில் அஜீத் எந்த ஒரு பஞ்ச் வசனமும் பேசமால், நரைத்த முடியுடன் இயல்பாகத் தோன்றும் காட்சியைப் பார்த்து ரசிகர்கள் கடவுளே அஜித்தே எனக் கொண்டாடி வருகின்றனர். அஜீத்துடன் 4-வது முறையாக திரிஷா இணைந்துள்ளார். மகிழ்திருமேனி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விடாமுயற்சியில் அஜித் தீம் மியூசிக் கடைசியில் கேட்க திரையரங்கில் காத்திருங்கள் என அனிருத் இன்று ட்வீட் போட்டிருக்கிறார். படம் 2025 பொங்கலன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அர்ஜுன் காட்சிகளும் டீசரில் இடம்பெற்றுள்ளது. தூய தமிழ் சொற்களுடன் டீஸர் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. தற்போது அஜீத் துபாயில் நடக்கவிருக்கும் கார்பந்தயப் போட்டிகளில் பிஸியாக இருக்கிறார். மேலும் குட்பேட் அக்லி படத்தின் ஷுட்டிங்கும் முடிவடையும் தருவாயில் இருப்பதால் 2025 அஜீத் ஆண்டாக இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *