ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் கங்குவா- விருதிற்கு தேர்வாகுமா?

- Muthu Kumar
- 08 Jan, 2025
தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருப்பவர் நடிகர் சூர்யா.தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர் சூர்யா கடந்த இரண்டு வருடங்களாக பெரிய அளவு ஹிட் படங்களை கொடுக்கவில்லை. இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
அதனை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் கமிட்டாகி கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்திற்காக மெனக்கெட்டு நடித்து வந்தார். இந்த படத்தின் மீது சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தது. பாகுபலி போல மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான நாள் முதலே தொடர்ந்து ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தது. இதனால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. சூர்யாவின் கெரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் கங்குவா.
இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கையை வைத்திருந்தார் சூர்யா. ஆனால் படம் ரசிகர்களிடையே தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்த காரணத்தால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இருப்பினும் நடிகர் சூர்யா தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்கின்ற திரைப்படத்திலும், அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்த இரண்டு திரைப்படங்களை முடித்த கையோடு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
2025 இல் நடைபெற உள்ள ஆஸ்கார் விருது போட்டியில் கலந்து கொள்வதற்கு கங்குவா படத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்திய சினிமாவில் இருந்து மலையாள படமான தி கோட் லைஃப், கேர்ல்ஸ் வில் பி கேர்ல்ஸ் ஆகிய படங்களும் பங்கேற்று இருக்கின்றது. ஆஸ்கார் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான போட்டியில் இந்த படங்கள் தேர்வாவதற்கு அதிக வாக்குகள் பெற வேண்டும்.
இதற்கான வாக்களிப்பு ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. அதன் பிறகு எந்தெந்த படங்கள் போட்டிக்கு தேர்வாகி இருக்கின்றது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 17ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் கங்குவா திரைப்படமும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *