டைம்ஸ் ஸ்கொயர் டிஜிட்டல் கண்காட்சி! பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு!

top-news
FREE WEBSITE AD


பெர்ஜயா டைம்ஸ் ஸ்குவாரில் நடைபெறும் Post-Normal Era Madani கண்காட்சிக்கு வருகை தருமாறு அனைத்து அமைச்சுகளையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.

பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், பெற்றோர்கள் மற்றும்  குழந்தைகளும் வரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கண்காட்சி தனித்துவமானது, சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற சூழல்களின் வளர்ச்சியால் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விவரிக்கிறது.

டிஜிட்டல் தொழில்நுட்பம், கண்காட்சியை இன்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.


ஆசிய பிராந்தியத்தில் இதுபோன்ற கண்காட்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்று நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.

மே 26 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *