முகைதீனுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி! லிம்முக்கு RM1.35 மில்லியன் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 8: அல்புகாரி அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட வரிவிலக்கை ரத்து செய்ததாக முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் மீது அவதூறான அறிக்கையை வெளியிட்டதற்காக முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் மீது லிம் தொடுத்திருந்த அவதூறு வழக்கில் லிம் இன்று வெற்றிபெற்றார்.

இதனை அடுத்து, முகைதீன் யாசின், 1.35 மில்லியன் ரிங்கிட்டை லிம் குவான் எங்-கிற்கு இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தாம் குற்றமற்றவர் என்பதை லிம் குவான் எங் நிரூபித்துள்ளதாக நீதித்துறை ஆணையர் ரோஸ் மாவார் ரோசைன் தெரிவித்தார். 

மேலும், சட்டச் செலவுக்காக RM50,000 செலுத்துமாறும் முகைதீனுக்கு உத்தரவிட்டதுடன், குற்றமிழைத்த அறிக்கையைத் திரும்பப் பெறுமாறும் அதை மீண்டும் வெளியிட வேண்டாம் என்றும் நீதிபதி கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டு  இந்த விவகாரம் தொடர்பாக முகநூலில் அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறப்படும் முகைதீனுக்கு எதிராக லிம் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், முஹைதின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சேத்தன் ஜெத்வானி, மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *