2026இல் 1,000 கோடி ரிங்கிட் வருவாய் வசூல்; நிதி அமைச்சு இலக்கு!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19-

விற்பனை, சேவை வரி, எஸ்.எஸ்.டி மறுஆய்வு செயலாக்கம், விரிவாக்கம் வழியாக, 2026ஆம் ஆண்டில் 1,000 கோடி ரிங்கிட் வருவாய் வசூலை நிதி அமைச்சு இலக்காகக் கொண்டுள்ளது.அதே வேளையில், 2025ஆம் ஆண்டிற்கான 500 கோடி ரிங்கிட் வசூலுக்கான இலக்கையும் அது நிலைநிறுத்தியிருக்கின்றது.

சேகரிக்கப்படும் அத்தொகை. தேவைப்படும் மக்களுக்குப் பயனளிக்கும் உதவி அல்லது முன்முயற்சி திட்டங்களுக்காக திருப்பித் தரப்படும் என்று நிதி அமைச்சின் கருவூல தலைமைச் செயலாளர், டத்தோ ஜொஹான் மஹ்முட் மெரிக்கான் தெரிவித்தார்.

"மக்களுக்கான செலவினங்கள் அதிகமாக உள்ளன. மேலும், நாம் வருவாய் தளத்தை விரிவுபடுத்த வேண்டும். ஆனால் வருவாயை விரிவுபடுத்துவதில் அரசாங்கம் மிகவும் முற்போக்கான அணுகுமுறையை எடுத்துள்ளது. அதாவது, அரசாங்கம் வரி தளத்தை விரிவுபடுத்தும்போது, வரிச்சுமை அதை வாங்கக்கூடியவர்கள் மீது அதிகமாக விழுகிறது, என்றார் அவர்.

நேற்று, கிளானா ஜெயாவில் உள்ள அரச மலேசிய சுங்கத்துறைக்கு வருகை மேற்கொண்ட பின்னர், பெர்னாமா தொலைக்காட்சியிடம் டத்தோ ஜொஹான் மஹ்முட் அத்தகவல்களைக் கூறினார்.வரும் ஜூலை முதலாம் தேதி முதல் விற்பனை வரி விகிதங்களை இலக்கு வைத்து மதிப்பாய்வு செய்வது மற்றும் சேவை வரியின் வரம்பை விரிவுபடுத்துவது ஆகியவை அமலுக்கு வருவதாக, அரசாங்கம் கடந்த ஜூன் 9ஆம் தேதி அறிவித்திருந்தது.

Kerajaan menyasarkan kutipan hasil RM500 juta pada 2025 dan RM1 bilion pada 2026 melalui semakan semula serta peluasan SST. Hasil ini akan digunakan untuk bantuan rakyat. Pendekatan progresif diambil agar cukai ditanggung oleh pihak berkemampuan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *