1 மில்லியன் லஞ்சம் பெற்ற 3 இசுலாமிய சமய அதிகாரிகள் - SPRM கைது!
- Thina S
- 06 Jun, 2024
PERLIS மாநில இசுலாமிய சமய விவகாரத் துறையின் அதிகாரிகளும் மசூதி இமாம் உட்பட மூவர் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Suruhanjaya Pencegahan Rasuah Malaysia (SPRM) விசாரணையில் இசுலாமிய பதிவு திருமணத்தில் சுமார் 1 மில்லியனுக்கும் மேலாக ஊழல் செய்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு பதிவு திருமணத்திற்கும் Jabatan Hal Ehwal Agama Islam Perlis (JAIPs) அதிகாரிகள் 4,000 முதல் 20,000 ரிங்கிட் வரையில் லஞ்சம் பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 45 வயதான Jabatan Hal Ehwal Agama Islam Perlis (JAIPs) அதிகாரியும் 25 வயதான அவரின் மகனும், 52 வயதான மசூதி imam என மூவரையும் 5 நாள்கள் விசாரணைக் காவலில் வைத்து விசாரிக்க Kangar Majistret நீதிபதி Ana Rozana Mohd Nor உத்தரவிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *