சிகாம்புட்டில் அந்நியர்கள் நடத்தும் 3 வர்த்தகத் தலங்களை மாநகர் மன்றம் மூடியது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்.12-

சிகாம்புட் சுற்றுப் பகுதிகளில் அந்நியர்கள் நடத்தும் 3 வர்த்தகத் தலங்களை கோலாலம்பூர் மாநகர் மன்றம் உடனடியாக மூடியது. இந்த அமலாக்க நடவடிக்கை மாநகர் மன்றத்தின் அமலாக்கத் துறை, குடிநுழைவுத் துறை மற்றும் உள்நாட்டு வாணிப வாழ்க்கைச் செலவினங்களுக்கான அமைச்சும் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக மாநகர் மன்றம் தெரிவித்தது.

இச்சோதனை நடவடிக்கை மூலம் 1976 ஊராட்சிச் சட்டப்படி 3 வர்த்தகத் தலங்கள் மூடப்பட்டன. அதோடு மட்டுமின்றி அந்த வர்த்தக உரிமம் பெற்றவர்கள் தொடர்பில் 2016 வர்த்தக உரிமம், வணிக மற்றும் தொழில்துறை சிறு சட்டத்தின் கீழ் 3 அபராத நோட்டிஸ்கள் வெளியிடப்பட்டதாகவும் தனது முகநூலில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் மாநகர் மன்றம் குறிப்பிட்டது.

Kuala Lumpur City Hall menutup tiga premis perniagaan milik warga asing di kawasan Segambut. Tindakan ini melibatkan kerjasama beberapa agensi dan tiga notis saman turut dikeluarkan di bawah undang-undang berkaitan perniagaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *