ஓம்ஸ் அறவாரிய சமய வகுப்பின் தீபாவளி அன்பளிப்பு!

top-news
FREE WEBSITE AD

ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவுடன், சிலாங்கூர் தமிழ்ப் பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத்தின் வழிகாட்டுதலுடன்,  கிள்ளான், ‘மலர் டிவி’ அலுவலகத்தில் வாரம் தோறும் செவ்வாய்க் கிழமை இலவசமாக  நடைபெற்று வரும் சமய வகுப்பிற்கு, மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்பு வருகை புரிந்து மாணவச் செல்வங்களுக்கு தீபாவளி அன்பளிப்போடு வண்ண பென்சில்கள் மற்றும் தேவார புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார். அதோடு குருமார்களுக்கும் சிறப்பு மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன்,  தங்கள் நேரத்தைப் பொருட்படுத்தாமல், சிரமம் பார்க்காமல், மாணவர்களை கட்டொழுங்குமிக்கவர்களாக, சமயப்பற்றுள்ளவர்களாக மாற்ற வேண்டும் எனும் முனைப்போடு வந்து போதிக்கும் இரு ஆசிரியர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட ஓம்ஸ் பா.தியாகராஜன், குழந்தைகளின் பெற்றோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு, இன்னும் ஆர்வமுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களையும் இதுபோன்ற சமய வகுப்புகளில் சேர்வதற்கு ஆர்வமூட்டுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

60 வருடங்களுக்கு முன்பு என் அப்பாவுக்கு முன் நின்று நான் படித்த நினைவுகள், இந்த மாணவர்களைப் பார்க்கும் போது வருகிறது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது ஓர் அற்புதமான வாய்ப்பு. இந்த வாய்ப்பினை நம் பிள்ளைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், நேரம் தவறாமையைக் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

மேலும் சிறு வயதிலிருந்தே திருநீறு இட்டுச் செல்லும் பழக்கத்தை நம் பிள்ளைகளுக்குப் பழக்க வேண்டும். இடைநிலைப்பள்ளிகளுக்குச் செல்லும்போது ஒருவேளை யாராவது கிண்டல் செய்தால் கூட, நாம் சிறு வயதிலிருந்தே பழக்கப்பட்ட இந்த மரபு நம்மை விட்டு அகலாது. நம மனசுக்கும், உடலுக்கும் எப்போதும் கவசமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

‘’இறைவனை பற்றிக்கொள் என்று இறைவன் மீது எப்போதும் பக்தியுடன் இருக்க வேண்டிய அவசியத்தை ஆசிரியர் செல்வம் வலியுறுத்தினார்.

எந்தக் கடவுளாக இருந்தாலும் அவரை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். திருமுறைகள் பாடுவதும், இறைவன் திருவடியை வணங்குவதும் நமக்குக் கிடைத்த அருள், அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என அவர் மாணவர்கள் மத்தியில் பேசினார்.

மேலும் மதம் மாறுவது இப்போது தொழிலாகிவிட்ட நிலையில், அது தேவையில்லாதது என எடுத்துரைத்தார். நம் தாயை விட்டு விட்டு, நம் தந்தையை விட்டு விட்டு வேறு அப்பா அம்மாவை நாம் ஏற்க முடியுமா? அதுபோல்தான் நம் மதமும். நம் மதம் முக்கியம். மற்ற மதங்களை விட நம் மதத்தில் எல்லாம் இருக்கிறது. எனவே மதம் மாறாமல் நம் மனசு நிலையாக இருக்க சிறுவயதிலிருந்தே இது போன்ற சமயம் வகுப்புகள் பிள்ளைகளுக்கு அவசியம் என அவர் கூறினார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *