LOVE SCAM மோசடியில் கைதான 20 பேருக்கு ஜாமின்! - Majistret நீதிமன்றம்
- Sangeetha K Loganathan
- 10 Oct, 2024
LOVE SCAM எனும் இணைய மோசடியில் சம்மந்த்தப்பட்டுள்ள 20 பேர் இன்று Majistret நீதிமன்றத்தில்
தங்கள் மீதானக் குற்றத்தை மறுத்து மேல்விசாரணை கோரினர். சீன நாட்டைச் சேர்ந்த 19 ஆண்களும் ஒரு தைவான் நாட்டு ஆடவரும் கடந்த செப்டம்பர் 23 ஆம் நாள் Horizon Hill di Iskandar Puteri பகுதியில் நண்பகல் 12 மணியளவில் கூட்டாகக் கைது செய்யப்பட்டனர்.
Majistret நீதிபதி கைது செய்யப்பட்ட 20 வெளிநாட்டினர்கள் மீதும் மேல் விசாரணை நடத்தும்படியும், தலா 8,000 ரிங்கிட் ஓர் உள்ளூர் நபர் உத்தரவாதத்துடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஜாமின் பெற்ற 20 பேரும் காவல் அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்பதற்காக மாதம் ஒரு முறை காவல் நிலையத்தில் கையெழுத்திடும்படி உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரனை நவம்பர் 18 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் 21 முதல் 36 வயதுக்குற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Seramai 20 scammer, termasuk 19 warga China dan seorang warga Taiwan, didakwa di Mahkamah Majistret Johor Bahru atas tuduhan memperdayakan mangsa melalui taktik 'love scam' pada 23 September lalu di Iskandar Puteri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *