தனியார் சமூகநலக் காப்பகத்தில் இருக்கும் பிள்ளைகளைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்! – காவல் துறை!
- Sangeetha K Loganathan
- 10 Nov, 2024
நவம்பர் 10,
சமூகநலத் துறையான Jabatan Kebajikan Masyarakat உட்பட தனியார் காப்பகங்களில் உள்ள தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என Bukit Aman குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் Datuk Seri Mohd Shuhaily வலியுறுத்தினார்.
GISBH போன்ற பல்வேறு தொண்டு நிறுவனங்கள் குழந்தைகள் காப்பகங்களை நடத்தி வருகின்றன, பல்வேறு காரணங்களுக்காகக் காப்பகத்தில் சேர்க்கும் தங்கள் பிள்ளைகளைக் கைவிட்டு விடாமல், அவர்களுக்கானச் சூழல் முறையாக உள்ளதா என்பதையும் பெற்றோராக நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என Bukit Aman குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் Datuk Seri Mohd Shuhaily தெரிவித்தார்.
அரசு துறையான JKM காப்பகங்களில் வளரும் பிள்ளைகளுக்கு அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்கும் நிலையில் தனியார் காப்பகங்கள் பிள்ளைகளுக்கு ஒழுங்கானச் சூழலை அமைத்து கொடுக்கிறார்களா என்பதையும் பெற்றோர்கள் அவ்வப்போது கண்காணித்தால் சிறார் வன்கொடுமைகளின் எண்ணிக்கை காப்பகங்களில் குறையும் என அவர் தெரிவித்தார்.
Pengarah CID Bukit Aman, Datuk Seri Mohd Shuhaily, menggesa ibu bapa memantau anak-anak di rumah kebajikan swasta dan memastikan persekitaran yang baik, sementara kerajaan bertanggungjawab penuh di pusat jagaan di bawah JKM.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *