தேசிய அளவிலானக் கபடிப் போட்டி!

top-news
FREE WEBSITE AD

நேற்று கெடாவில் 21 வயதினருக்குற்பட்டவர்களுக்காகத் தேசிய அளவில் கபடிப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பினாங்கு மாநில இந்தியர் திரைப்படச் சங்கம் ஏற்பாட்டில் டிரீம் ஸ்கை ஹோம் புரொடக்‌ஷன் , கெடா மாநிலக் கபடிக் கழகம் ஆதரவில் தேசிய அளவிலானக் கபடிப் போட்டி 2024 ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியில் பெண்கள் பிரிவில் கூட்டரசு வளாகம் முதல் இடத்திலும், இரண்டாம் நிலையில் நெகிரி செம்பிலான் மாநிலமும், மூன்றாம் நிலையில் கெடா மாநிலமும் கிளாந்தான் மாநிலமும் வெற்றிபெற்றனர்.

ஆண்களுக்காநப் பிரிவில் கெடா முதல் நிலையிலும், நெகிரி செம்பிலான் இரண்டாம் நிலையிலும், மூன்றாம் நிலையில் பினாங்கு மலாக்கா அணிகளும் வெற்றி பெற்றனர்.

கபடி, நமது பாரம்பரிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும் ஒரு வீர விளையாட்டாகவும், நமது சமூகத்தின் ஒற்றுமை, தைரியம், பொறுப்புணர்வு, மன உறுதியையும் ஒரு சேர கலந்தவையாகத் திகழ்கிறது என ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி புகழாரம் சூட்டினார்1990ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் சேர்க்கப்பட்டதன் மூலம் சர்வதேச அளவிலான கவனத்தைப் பெற்றது. இன்றைக்கு, Pro Kabaddi League போன்ற போட்டிகள் மூலம் இந்த விளையாட்டு உலகளாவிய நிலையில் பிரபலமடைந்து வருகிறது. மேலும்  உள்ளூரில் இளைஞர்களுக்காக இம்மாதிரியானப் போட்டிகள் நடத்தப்படுவதைத் தாமும் அரசாங்கமும் ஆதரிப்பதாகவும் அவர் நம்பிக்கை அளித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *