மக்களின் நலன்: மடானி பொருளாதாரத்தின் நோக்கம்

top-news

மடானி அரசாங்கத்தின் பொருளாதாரத்தின் இலட்சியங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆசிய நாடுகளுக்கிடையே மலேசியாவை ஒரு சிறந்த பொருளாதாரத்தை மறுசீரமைத்த நாடாக உருமாற்றுவதில் 2024ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் பெரும் பங்கை வகித்துள்ளது எனலாம்.
அவ்வகையில், பொருளாதாரத்தை உயர்த்த உலகளாவிய முதலீட்டு இலக்கு, டிஜிட்டல் சார்ந்த தொழில், கண்டுபிடிப்பு, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் வழி சிறந்த அடைவு நிலையை அடைய மலேசியா இணக்கம் கண்டுள்ளது. அதோடு, பொருளாதார ரீதியில் நாடு முன்னேற அரசாங்கம் மட்டுமின்றி மக்கள், தொழில்துறையின் அடிப்படையில் ஒற்றுமை உணர்வுடன் செயல்பட வேண்டும். 
பொருளாதாரம் உயர்வதனால் வேலை வாய்ப்பு, சம்பள உயர்வு, கல்வி, சுகாதார வசதி, உலகத்தரம் வாய்ந்த அடிப்படை வசதிகள், சமூக பாதுகாப்பு என அனைத்து வசதிகளும் ஏற்படும்.

2024ஆம் ஆண்டின் பொருளாதாரம் வலுவடைந்துள்ளதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2023ஆம் ஆண்டின் இரண்டாம் கால அளவைக் காட்டிலும் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் கால அளவில் 2.8 விழுக்காட்டிலிருந்து 5.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மேலும், ரிங்கிட்டின் மதிப்பு, எஃப்பி எம் கேஎல்சிஐ பரிமாற்றம், தொழில்துறை உற்பத்தி குறியீடு (3.9ரூ), சராசரி மாத ஊதியம் (9.4ரூ), மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் (5.4ரூ) ஆகியவற்றில் உயர்வு கண்டுள்ளது. அதோடு பொருளாதார வளர்ச்சியால் வேலையின்மை விகிதமும் 3.3 விழுக்காடாகக் குறைந்துள்ளது எனலாம். நாட்டில், சுற்றுலாத்துறையில் வருமானம் அதிகரித்துள்ள நிலையில் அதிக சுற்றுலாப் பயணிகள் மலேசியாவைச் சிறந்த சுற்றுலாத் தலமாகத் தேர்வு செய்திருப்பது தெரிய வருகிறது. அதுமட்டுமல்லாமல், நிகர தேசிய கடன் பெறுதலின் விகிதமும் 7.5 விழுக்காடாக குறைந்துள்ளது.
மடானி அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டத்தின் கீழ் மக்கள் நலன் எஸ்டிஆர் உதவித்தொகை, வறுமைக் கோட்டு வருமானம் (பிஜிகே) உணவு திட்டத்தின் ஒதுக்கீடு 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 2024ஆம் ஆண்டு உயர்ந்துள்ளதோடு, சாரா உதவித் தொகை, நடுத்தர மக்களின் மின்சார கட்டண மானியங்கள், வீட்டு விற்பனைத் திட்டம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள் பிரிவினர்களுக்கும் மடானி அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டத்தின் கீழும் பல ஒதுக்கீடுகள் 2024ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் கீழும் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகை, கஃபா ஆசிரியர் ஊக்கத் தொகை, மத ஆசிரியர்கள், இமாம்கள், பிலால், சியாக் ஆகியோரின் சிறப்பு உதவித்தொகை ஆகியவை 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 2024ஆம் ஆண்டு உயர்ந்துள்ளதோடு புதிதாக மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்களுக்கு இலவச பயண அனுமதிச்சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறை நாட்டின் பொருளாதாரத்துறை மேம்படுவதற்கு பெரும் பங்கு வகித்து வருகிறது எனலாம். அவ்வகையில், மடானி அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 2024ஆம் ஆண்டு நெல் கொள்முதல் தரை விலை, அரிசி விலை மானிய திட்டம், ரப்பர் உற்பத்தி ஊக்குவிப்பு, பருவ மழை நிவாரணத் திட்டம் ஆகியவை உயர்ந்துள்ளது.மேலும், விவசாயிகளுக்காகப் பிரத்தியேகமாக சிறப்பு உதவிகளும் நெல் பயிர் தக்காஃபுல் பாதுகாப்பு திட்டமும் இவ்வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டிற்காக 376 திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் 341 திட்டங்கள் செயல்முறைபடுத்தப்பட்ட நிலையில் உள்ளன.
அதுமட்டுமல்லாமல், 2024ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டங்கள் மக்களுக்கு பல வகையில் நன்மைகளை அளித்துள்ளன. அவ்வகையில், எஸ்டிஆர் உதவித்தொகை (3.6 பில்லியன் ஒதுக்கீடு - 8.4 மில்லியன் பயனர்கள்), ரஹ்மா உதவித்தொகை (282 மில்லியன் ஒதுக்கீடு - 700,000 பயனர்கள்), ஆரம்ப பள்ளி உதவித்தொகை (776 மில்லியன் ஒதுக்கீடு- 5 மில்லியன் பயனர்கள்), ஆகிய மடானி அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்துள்ளன.
 
மேலும், தேசிய ஆற்றல் மாற்றத் திட்டத்தின் வரைபடம் (என்இடிஆர்), 2030 புதிய தொழில்துறை யுக்தி (என்ஐஎம்பி), கேஎல் 20 (உலகின் முதல் 20 தொடக்க மைய இடங்களில் கோலாலம்பூர்) ஆகிய திட்டங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியை உருவாக்கியுள்ளதோடு முதலீட்டை ஈர்த்து,  வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியின் மேம்பாட்டுத் திட்டங்கள் நாட்டிலுள்ள 40 ஏழ்மை நிலை பள்ளிகளின் தரத்தை 582 மில்லியன் ஒதுக்கீட்டில் உயர்த்தியுள்ளதோடு சுகாதாரத்தை பேணும் வகையில் 400 மருத்துவமனைகளை மேம்படுத்த 150 மில்லியன் ஒதுக்கீட்டை வழங்கி உதவியுள்ளது.மேலும், 20,000 பயனாளிகளுக்கு டிஎஃப்ஐ மைக்ரோ கடன், 20 பில்லியன் ஒதுக்கீட்டில் 7215 விண்ணப்பதாரர்களுக்கு சிரமங்களை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்கு நிதி வசதிகளை வழங்கும் வணிக நிதியளிப்பு உத்தரவாதத் திட்டம், மடானி சமூக நலத்திட்டம் (செஜாத்தி மடானி) ஆகிய திட்டங்களின் வழி அரசாங்கம் வர்த்தகத்துறையில் வியாபாரிகளுக்கு உதவியுள்ளது.

வீட்டுக் கடன் உத்தரவாதத் திட்டங்கள் மற்றும் மக்களின் வருமான முன்முயற்சிகளுடன் நிதியை மேம்படுத்துதல். நிலையான வருமானம் மற்றும் சம்பள சிட்டை இல்லாத தனிநபர்கள் கடன் பெறுவதற்கு வீட்டுக் கடன் உத்தரவாதத் திட்டம் தடையாக உள்ளது. அரசாங்கம் உத்தரவாதமாக 10 பில்லியன் வழங்கியுள்ளது. இதுவரை 2794 விண்ணப்பதாரர்களை உள்ளடக்கிய 1.6 பில்லியன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
4504 பயனர்களை உள்ளடக்கிய 500 மில்லியன் ஒதுக்கீட்டின் மூலம் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதில் அரசாங்கம் முக்கிய பங்காற்றியுள்ளது. தனிப்பட்ட நிதியை மேம்படுத்துவதற்காக கேடபல்யூஎஸ்பி கணக்கிலிருந்து 3.28 மில்லியன் அங்கத்தினர்களுக்கு மொத்தம் 8 பில்லியன் தொகையை திரும்பப் பெறுவதற்கு உறுப்பினர்களுக்கு அரசாங்கம் நெகிழ்வுத்தன்மையை வழங்கியுள்ளது.அதோடு, 2024 வரவு செலவுத் திட்டம் விவசாயிகள், மீனவர்களுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2.5 பில்லியன் ரப்பர் உற்பத்தி ஊக்குவிப்பு மூலம் 230,000 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். நெல் பயிர்களுக்கு மானியங்கள், ஊக்கத்தொகைகள் ஒதுக்கீட்டில் 400 மில்லியன் 188,381 சிறு விவசாயிகளுக்கு உதவியுள்ளதோடு 178 மில்லியன் ஒதுக்கீட்டில் மீனவர்களுக்கான மானியங்கள், சலுகைகள் வழங்கப்பட்டதோடு 19,250 மீனவத் தொழிலாளர்களுக்குப் பயனளித்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *