3 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் பெண் பலி!

top-news

ஏப்ரல் 11,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் பெண் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு ஜொகூர் பாருவிலிருந்து Ulu Tebrau செல்லும் சாலையில் 3 வாகனங்கள் விபத்துக்குள்ளானதாகப் பெறப்பட்ட அவசர அழைப்பை அடுத்து சம்பவ இடத்திற்கு 10 மீட்பு அதிகாரிகளுடன் விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாக Johor Jaya மாவட்ட மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் M K Haridas தெரிவித்தார்.

விபத்தில் Perodua Myvi, 2 HILUX என 3 வாகனங்கள் சேதமடைந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் கனமழையிந் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்திலேயே Perodua Myvi வாகனமோட்டியான 58 வயது பெண் சம்பவ இடத்திலேயே பலியானதாக Johor Jaya மாவட்ட மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் M K Haridas தெரிவித்தார். விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தை விசாரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

Tiga kenderaan terlibat dalam kemalangan di jalan Johor Bahru-Ulu Tebrau akibat hilang kawalan semasa hujan lebat. Seorang wanita berusia 58 tahun maut di lokasi. Polis sedang menyiasat punca kejadian yang turut melibatkan beberapa mangsa cedera.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *