விபத்தில் தம்பதியர் பலி! 3 பிள்ளைகள் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 18 Jun, 2025
ஜூன் 18,
கட்டுப்பாட்டை இழந்த Proton Wira வாகனம் லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவர்களின் 3 பிள்ளைகள் படுகாயம் அடைந்ததாகவும் பெக்கான் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Zaidi Mat Zin தெரிவித்தார். செகாமாட்டிலிருந்து குவாந்தான் நோக்கி செல்லும் சாலையில் இரவு 10 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்ததாகப் பெக்கான் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Zaidi Mat Zin தெரிவித்தார்.
மற்றொரு வாகனத்தை முந்தும் போது எதிரில் வந்த லாரியை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த தம்பதியர் இருவரும் 41 வயது Jamal Azizul அவரின் மனைவி Lizawati Abdullah என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் Proton Wira வாகனத்திலிருந்த 6 முதல் 17 வயதுள்ள அவர்களின் 3 பிள்ளைகளும் படுகாயம் அடைந்திருப்பதாகவும் 31 வயது லாரி ஓட்டுநரும் அவரின் 2 உதவியாளர்களும் காயமின்றி தப்பியதாகவும் பெக்கான் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Zaidi Mat Zin தெரிவித்தார்.
Sepasang suami isteri maut di tempat kejadian selepas kereta mereka bertembung dengan lori di Pekan, manakala tiga anak mereka cedera. Kemalangan berlaku ketika cuba memotong kenderaan lain. Pemandu lori dan dua pembantunya tidak cedera.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *