20 ஆண்டுகள் பயணித்த "ஸ்கைப்" மே மாதத்துடன் நிறுத்தம்!

- Muthu Kumar
- 03 Mar, 2025
2003ஆண்டு ஸ்கான்டிநேவியர்களான எஸ்டோனியா நாட்டினர் நிக்லஸ் ஜென்ஸ்ட்ராம் மற்றும் ஜானஸ் பிரிஸ் ஆகியோர் ஸ்கைப் மென்பொருளை உருவாக்கினர்.
இந்த மென்பொருள் மூலம் கணினிகளுக்கு இடையே பயனாளிகள் ஆன்லைன் மூலம் பேசவும், வீடியோ கால் மூலம் முகத்தைப் பார்த்து பேசவும் முடியும். இந்த மென்பொருள் மூலம் மொபைல், லேப்டாபிலும் பயன்படுத்தலாம், இந்த கால்களுக்கு கட்டணமும் மிகக்குறைவாக இருந்தது. உலகளவில் இணையதளத்தின் வேகம் அதிகரித்து 5ஜி தொழில்நுட்பம் வந்தபின், ஸ்கைப் மென்பொருளும் நவீன வீடியோ கால் வசதி, உடனடி மெசேஜ், ஃபைல் ஷேரிங், குழுவாகப் பேசுதல், தகவல் பரிமாறுதல் போன்றவற்றை அறிமுகம் செய்தது.
வெளிநாடுகளில் வசிப்போர் தங்கள் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளவும், வெளிநாட்டு நிறுவனங்கள் உலகளவிலான மற்ற நிறுவனங்களுடன் ஆய்வுக்கூட்டம், கலந்தாய்வு செய்யவும் ஸ்கைப் மென்பொருள் பெருமளவு உதவியது.
2011ம் ஆண்டு ஸ்கைப் நிறுவனத்தை ஸ்கான்டிநேவியர்களிடம் இருந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கி அதை மேம்படுத்தி அறிமுகம் செய்தது. மைக்ரோசாப்ஃட் நிறுவனம் ஸ்கைப்பை வாங்கியின் பயனீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து 5 கோடிக்கும் மேல் பதிவு செய்த பயனீட்டாளர்களாக மாறினர்.
இந்நிலையில் வரும் மே மாதத்துடன் ஸ்கைப் தனது சேவையை முடிப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. எக்ஸ் தளத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பதிவிட்ட கருத்தில் ' 2025, மே மாதம் தொடங்கியவுடன், ஸ்கைப் தொழில்நுட்பம் நிறுத்தப்படும்' எனத் தெரிவித்து உள்ளது.ஆன்லைன் சைட் இபே நிறுவனம் 2005ம் ஆண்டு ஸ்கைப்பை 260 கோடி டாலருக்கு வாங்கியது, 2009ம் ஆண்டு அதை இபே நிறுவனம் மைக்ரோசாப்ஃட் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது.
ஆனால், முறைப்படி 2011ம் ஆண்டுதான் அதன் கைகளுக்கு மாறியது. சமீப ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் வளர்ச்சியால், ஸ்கைப் தனக்கான இடத்தை தக்கவைப்பதில் சிரமங்களைச் சந்தித்தது. மெட்டாவின் வாட்ஸ்அப், ஜூம் ஆகியவை வந்தபின் ஸ்கைப் தனக்கான இடத்தை இழந்தது. மைக்ரோசாப்ஃப்ட் நிறுவனமும் டீம் மென்பொருளை மேம்படுத்தி உருவாக்கியது. ஸ்கைப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியபின், தனக்கான இடத்தை ஸ்கைப் இழந்தபின் சந்தையிலிருந்து ஓய்வு முடிவை மைக்ரோசாஃப்ட் எடுத்துள்ளது. ஸ்கைப் பயனாளிகள் இனிமேல் மைக்ரோசாப்ஃடின் டீம் மென்பொருளை பயன்படுத்த அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *