கிள்ளான் திடீர் வெள்ளம்! இருவர் பலி
.jpeg)
- Shan Siva
- 12 Apr, 2025
ஷா ஆலம், ஏப்ரல் 12: நேற்று காலை 6 மணி நிலவரப்படி, கிள்ளான் மற்றும் பெட்டாலிங்கில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 380 குடும்பங்களைச் சேர்ந்த 1,411 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து ஆறு தற்காலிக நிவாரண மையங்கள் (PPS) திறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டாலிங்கில் மூன்று நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், கிள்ளானில் மேலும் மூன்று மையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிலாங்கூர் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
பெட்டாலிங், கிள்ளான், சிப்பாங், உலு லங்காட் மற்றும் கோம்பாக் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், சில சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
கிள்ளான் மற்றும் ஷா ஆலமில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின்சாரம் தாக்கி இதுவரை இரண்டு பேர் மற்றும் ஒரு நாய் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Seramai 1,411 orang daripada 380 keluarga dipindahkan akibat banjir kilat di Klang dan Petaling. Enam pusat pemindahan sementara (PPS) dibuka. Dua kematian dan seekor anjing dilaporkan akibat renjatan elektrik di kawasan terjejas banjir.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *