தயவு செய்து அன்வாருக்கு உதவுங்கள் - ஹம்ஸா வேண்டுகோள்!

top-news
FREE WEBSITE AD

வாரந்தோறும் சந்தை மற்றும் சிறு கடைகளுக்குச் செல்வதாக ஒப்புக்கொண்டாலும் பொருட்களின் விலை உயர்வு குறித்து தனக்குத் தெரியாது என்று கூறிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் விமர்சித்துள்ளார். 

 அன்வார் சென்ற இடங்களில் விலை ஏற்றம் காணப்படவில்லை என்றாலும், தற்போதைய பொருட்களின் விலை உயர்வால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மறுக்க முடியாது என்று ஹம்ஸா தெரிவித்தார்.

அன்வார் ஒவ்வொரு வாரமும் சிறிய ஸ்டால்கள், சந்தைகளுக்குச் செல்வதாகக் கூறினார். ஒவ்வொரு வாரமும் சிறிய கடைகள் மற்றும் சந்தைகளுக்குச் சென்றால், பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்று தெரியாவிட்டால், இது இந்த நாட்டிற்கு ஒரு பிரச்சனை.

அன்வார், ஒருவேளை சந்தைக்கு சென்றபோது ​​விலை உயராமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது நாடு முழுவதும் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்று மக்கள் தெரிவிப்பதாக ஹம்ஸா கூறினார். எனவே, 'தயவுசெய்து அன்வாருக்கு உதவுங்கள்' என்று அவர் ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தலைநகரைச் சுற்றியுள்ள சந்தைக்கு அன்வார் சென்று  விலை உயர்வு குறித்து ஆய்வு செய்யுமாறு ஹம்சா பரிந்துரைத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதற்குப் பதிலளித்த அன்வார், மக்களைச் சந்திக்கும் போதெல்லாம், அவர்களின் பிரச்சனைகளைக் கேட்பேன், குறிப்பாக பொருட்களின் விலை குறித்து கேட்பேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]