துப்பாக்கியுடன் வாகனத்தில் சுற்றிய இளைஞர் கைது!

- Sangeetha K Loganathan
- 21 Jun, 2025
ஜூன் 21,
சாலையில் துப்பாக்கியைக் காட்டியபடி வாகனத்தைச் செலுத்திய இளைஞரைக் காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த வியாழக்கிழமையிலிருந்து சமூக ஊடகத்தில் ஆடவர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டியபடி சாலையில் வாகனத்தைச் செலுத்தும்படியானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியது. இச்சம்பவம் கடந்த வியாழன் கூச்சிங்கில் உள்ள Jalan Kereta Api சாலையில் நிகழ்ந்திருப்பதாகவும் காணொலியின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் Kuching மாவட்டக் காவல் ஆணையர் Alexson Naga Chabu தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 23 வயது இளைஞர் ஜூன் 23 வரையில் காவல்துறையின் தடுப்புக்காவலில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட சோதனையில் அவர் பொதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதைக் காவல்துறை கண்டறிந்துள்ளதாக Kuching மாவட்டக் காவல் ஆணையர் Alexson Naga Chabu தெரிவித்தார். முன்னமே 2 குற்றச் செயல்களுக்காக 23 வயது இளைஞர் தேடப்பட்டு வந்ததாகவும் தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
Seorang lelaki berusia 23 tahun ditahan selepas videonya menunjukkan senjata api semasa memandu di Kuching tular di media sosial. Polis turut mendapati suspek positif dadah dan sedang disiasat atas kesalahan lampau serta ditahan hingga 23 Jun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *