Alleycats புதிய அத்தியாயம்!

- Muthu Kumar
- 18 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 18-
Alleycats என்ற ஐகானிக் இசைக்குழுவின் அழகான பாடல்களை இன்றைய தலைமுறையினர் மதித்து மனதில் கொள்ள வேண்டும் என்ற ஆசை தனது உள்ளத்தில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது வெறும் ஒரு பாரம்பரியத்தைத் தொடர்வது மட்டுமல்ல, எனது தந்தை டத்தோ லோகநாதன் ஆறுமுகம் மற்றும் டேவிட் ஆறுமுகம் ஆகியோரின் கனவு.
இந்த நீண்டகால கனவை நனவாக்க, 38 வயதான பாடகி தாஷா லோகன், Alleycats இன் மறக்கமுடியாத ஐந்து பாடல்களை மறுபதிவு செய்து 'லெகசி' என்ற ஐந்து பாடல் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.தனது தந்தை மற்றும் பெரியப்பாவின் படைப்புகளை இன்றைய சமுதாயத்தினர் நினைவு கொள்வதற்காக இந்த ஆல்பத்தை உருவாக்கியதாகவும், தான் Alleycats பாடல்களை கேட்டு வளர்ந்ததாக தாஷா லோகன் கூறினார்.
தனது இசைப் பயணத்தில் தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் எப்போதும் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும், திறமையான குழுவினரின் உதவியுடன் ஐந்து ஆண்டுகால கனவை நனவாக்கியதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *