எல்லாம் உறுதியான பின் சொல்கிறேன்-வேள்பாரி பற்றி இயக்குனர் சங்கர்!

- Muthu Kumar
- 20 Dec, 2024
மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கியது போல் எஸ்.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை படமாக்க ஆசைப்படுகிறார் ஷங்கர். பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பும் அவருக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இந்த படத்தின் கதையை ஏற்கனவே அவர் எழுதி முடித்துவிட்டார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஷங்கர் 'வேள்பாரி படத்தின் திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் திடகாத்திரமாக, வீரர்கள் போல கம்பீரமாக இருக்க வேண்டும். மேலும், பெரிய பட்ஜெட்டை தாங்கக்கூடிய நடிகர்கள் வேண்டும். இப்போது யாராவது உடம்பை நன்றாக வைத்திருக்கும் புகைப்படங்களை பார்த்தால், அவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து சேர்த்து வைத்து வருகிறேன். எல்லாம் உறுதியான பின் உங்களுக்கு சொல்கிறேன்' என கூறியிருக்கிறார்.
பொன்னியின் செல்வன் நாவலை எம்.ஜி.ஆர் முதல் கமல் வரை பலரும் முயன்றும் எடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் அதில் பல முன்னணி நடிகர்கள் ஈகோ இல்லாமல் நடிக்க வேண்டும். எல்லோரையும் ஒருங்கிணைத்து படத்தை உருவாக்க வேண்டும். மணிரத்னமே பலமுறை முயன்று தோற்றுப்போனார். இறுதியில்தான் அவர் வென்றார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி என பலரும் அப்படத்தில் நடித்திருந்தனர். அதுபோல, ஷங்கர் எதிர்பார்ர்ப்பது போல ஹீரோக்கள் அவருக்கு கிடைக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே வேள் பாரி நாவல் படமாக மாறும் வாய்ப்பிருக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *