புஷ்பா 2 பார்க்க வந்து இறந்த பெண்ணிற்கு ரூ.25 லட்சம் தரும் அல்லு அர்ஜுன்!

- Muthu Kumar
- 07 Dec, 2024
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் வெளியாகி உள்ளது. படத்திற்கு முந்தைய நாள் இரவே பிரிமியர் காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.ஐதராபாத்தில் சந்தியா திரையரங்கில் பிரிமியர் காட்சிக்கு குடும்பத்துடன் வந்திருந்த பெண் கூட்டநெரிசலில் சிக்கி மரணமடைந்தார். அவரது மகன் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
அல்லு அர்ஜுன் அந்த தியேட்டருக்கு வந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்த நிலையில் தியேட்டர் நிர்வாகம், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நேற்று அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் ட்விட்டரில் ஒரு காணொளி வெளியிட்டு இருக்கிறார்.இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்து இருக்கிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *