இந்தியாவையும் இந்திய ரசிகர்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும்- தோர் கதாபாத்திரம் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்!
- Muthu Kumar
- 27 Sep, 2024
கடந்த 2008-ம் ஆண்டு 'அயர்ன் மேன்' திரைப்படத்திற்கு பின்னர் மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று சொல்லப்படும் மார்வல் சூப்பர் ஹீரோக்களின் திரைப்பட வரிசை ஆரம்பமானது. இந்த வரிசையில்தான் 'ஹல்க்', 'தோர்', 'கேப்டன் அமெரிக்கா' என அடுத்தடுத்து சூப்பர் ஹீரோ படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வகையில் அவெஞ்சர்ஸ் இன்பினிடி வார் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து 4வதாக வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படத்துடன் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் நான்காம் கட்டம் நிறைவடைந்தது. இதில் முக்கிய கதாபாத்திரங்களான அயர்ன்மேன், ப்ளாக் விடோ இறந்து போனதால், அதில் நடித்திருந்த ராபர்ட் டவுனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹன்ஸன் ஆகியோர் மார்வெல் திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெற்றனர். அதேபோல கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால், அதில் நடித்த கிறிஸ் எவான்ஸ் மார்வெல் திரைப்படங்களிலிருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து 'அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி டிபென்ஸ்' என்ற புதிய படத்தின் திட்டத்தை MCU வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மார்வெல் ரசிகர்களுக்கு அதிரடி அனுபவத்தை அளிக்கும் வகையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை இந்த படத்தில் இணைத்துள்ளனர். அதாவது, அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் சூப்பர் வில்லனாக இருந்து, ஹீரோக்களை துவம்சம் செய்த கதாபாத்திரமான கிங் தானோஸ் கதாபாத்திரம் மீண்டும் புதிய படத்தில் வர உள்ளது.
இதன்மூலம் சக்திவாய்ந்த வில்லனான கிங் தானோஸ் கதாபாத்திரம் 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி டிபென்ஸ்' படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் வரும் புதிய அவெஞ்சர்ஸ், கிங் தானோஸை எதிர்த்துப் போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அவெஞ்சர்ஸ் இனிபினிடி வார் படத்தில் தோர் கதாபாத்திரத்தில் நடித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் இந்திய ரசிகர்கள் பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது..
'இந்தியாவையும் இந்திய ரசிகர்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 2018-ம் ஆண்டு 'இன்பினிட்டி வார்' வெளிவந்தபோது ஒரு காணொளி பார்த்தேன். அதில், இந்த படத்தில் வரும் 'பிரிங் மீ தானோஸ்' காட்சிக்கு இந்திய ரசிகர்கள் ஒரு திரையரங்கில் பாப்கார்னை எறிந்து ஆரவாரம் செய்தனர். அதுபோன்ற எதையும் நான் அதற்கு முன்பு பார்த்ததில்லை. ஒவ்வொரு முறையும் நான் இந்தியா செல்லும்போது, அதை நினைத்து பார்ப்பேன்,' என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *