அமெரிக்கா மலேசியாவைக் கட்டுப்படுத்தவில்லை!
.jpeg)
- Shan Siva
- 12 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 12: அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு வல்லரசு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போரில், அமெரிக்கா மற்றும் சீனா இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு டிரம்ப் நிர்வாகம் மலேசியாவைக் கட்டாயப்படுத்தவில்லை என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் தெரிவித்தார்.
தற்போது, மலேசியா நடுநிலையாக இருப்பதை அமெரிக்கா கடினமாக்குகிறது என்று தாம் நம்பவில்லை என்று அமெரிக்க ஒளிபரப்பாளரான சிஎன்பிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ஒரு கோரிக்கை இருந்தால், அது தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் நிவர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வது பற்றியதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 2 ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியா உட்பட பல நாடுகள் மீது கடுமையான பரஸ்பர வரிகளை அறிவித்தார்.
இதனை அடுத்து நிதிச் சந்தைகள் சரிந்த நிலையில், புதன்கிழமை டிரம்ப், சீனாவைத் தவிர பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் வரிகளை அமல்படுத்துவதை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது!
Menteri Tengku Zafrul menegaskan bahawa Malaysia tidak dipaksa memilih antara AS dan China. Beliau berkata, AS tidak menyukarkan pendirian berkecuali Malaysia dan hanya fokus pada isu keselamatan teknologi serta imbangan perdagangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *