வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு 1.5% EPF பங்களிப்பு முதலாளிகள் வழங்க வேண்டும்!
- Muthu Kumar
- 23 Oct, 2024
கோலாலம்பூர்:
வெளிநாட்டு ஊழியர்களுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) பங்களிப்பை முதலாளிகளிடமிருந்து 1.5 சதவீதமாகவும், தொழிலாளர்களிடமிருந்து 10 சதவீதமாகவும் அமைக்க வேண்டும் என்று செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் முன்மொழிந்துள்ளார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் EPFக்கு 10 சதவீத பங்களிப்பை வழங்கும்போது, முதலாளிகள் 1.5 சதவீத பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் கோருவதை தாம் முன்மொழிய விரும்புவதாக அவர் கூறினார்.
உதாரணமாக, ஒரு வெளிநாட்டுத் தொழிலாளியின் அடிப்படைச் சம்பளம் RM1,700 எனில், 1.5 சதவிகிதம் முதலாளியின் பங்களிப்பு RM25.50 ஆக இருக்கும், அதே சமயம் ஊழியரின் பங்களிப்பு RM170 ஆக இருக்கும், மொத்தமாக EPF பங்களிப்புகளில் RM195.50 ஆக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் தொகை கிட்டத்தட்ட RM200 ஆகும். இது அடுத்த ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதிய உயர்வுக்கு சமம் என்று 2025 சப்ளை பில் விவாதத்தின் போது அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *