ரமலான் சந்தையில் பட்டாசு விற்பனைக்கு அனுமதியில்லை!

- Sangeetha K Loganathan
- 11 Mar, 2025
மார்ச் 11,
நேன்புப் பெருநாளுக்கானச் சிறப்பு ரமலான் சந்தைகளில் பட்டாசுகள் விற்பனைக்கு அனுமதியில்லை என ஜொகூர் மாநிலத்தின் Pontian நகராண்மைக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக ரமலான் சந்தைகளில் பட்டாசுகளை விற்பனை செய்வதாக வெளிவந்த புகார்களுக்கு Pontian நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் சம்மந்தப்பட்ட வணிகக் கடைக்கான உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் Pontian நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
ரமலான் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் உணவுகள் ஆகியவற்றுக்கானக் கட்டுப்பாடுகளை மாவட்டங்களின் நகராண்மைக் கழகம் தீர்மானிப்பதால் Pontian மாவட்ட நகராண்மைக் கழகம் பட்டாசுகள் விற்பனைக்கான உரிமத்தை எந்தவொரு வணிகக் கடைகளுக்கும் வழங்கவில்லை என்றும், பட்டாசு விற்பனைக்கான விண்ணப்பங்களை Pontian நகராண்மைக் கழகம் நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Majlis Perbandaran Pontian (MPPn) menafikan mengeluarkan permit kepada peniaga mercun di Bazar Ramadan Ayer Baloi. MPPn menegaskan hanya PDRM berkuasa meluluskan penjualan bunga api dan mercun. Dakwaan bahawa staf bernama 'Dino' memberi kebenaran turut disangkal.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *