மலாய்க்காரர்களைப் பிளவுபடுத்தியது நானா? – மகாதீர் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்‌, ஐூன்‌ 24: மலாய்‌ சமூகத்தில்‌ ஆழமான விரிசல்‌ ஏற்பட்டதற்கு நான்‌: காரணம்‌ அல்ல. மாறாக, 2003ஆம்‌ ஆண்டில்‌ நான்‌. பதவி விலகிய பிறகு பிரதமர்‌ பொறுப்புக்கு வந்தவர்களே. அதற்குக் காரணம்‌ என்று முன்னாள்‌ பிரதமர்‌ மகாதீர்‌. தெரிவித்தார்‌.

1961ஆம்‌ ஆண்டு முதல்‌, 2003ஆம் ‌ஆண்டு வரை தாம்‌ பிரதமராக இருந்த வேளையில்‌, மலாய்க்காரர்கள் அனைவரும்‌ அம்னோவின் பெரும்பாலும்‌ஒற்றுமையுடன்‌ இருந்தனர்‌. அகக்கால கட்டத்தில்‌ நடைபெற்ற ஐந்து பொதுத்தேர்தல்களிலும்‌. தேசிய முன்னணிக்கு மூன்றில்‌ இரண்டு பங்கு. பெரும்பான்மை கிடைத்தது என்று அவர்‌ சுட்டுக்காட்டினார்‌.

தமக்குப்‌ பிறகு பிரதமர்‌ பதவிக்கு வந்த அப்துல்லா அமாட்‌ படாவியின்‌ காலத்தில்‌ வீழ்ச்சி ஏற்படத்‌ தொடங்கியது.கடந்த 2008ஆம்‌ ஆண்டு அவர்‌ தேர்தலைச்‌ சந்தித்தபோது ஐந்து மாநிலங்களில்‌ அவர்‌ தோல்வி கண்டார்‌ என்றார்‌ மகாதீர்‌.

அன்று தொடங்கித்தான்‌ அம்னோவில்‌ பிளவு ஏற்படத்‌ தொடங்கியது. அம்னோ மிகவும்‌ பலவீனம்‌ அடைந்தது. மக்களின்‌ ஆதரவை இழந்து விட்டது. கடந்த 2004ஆம்‌ ஆண்டுப்‌ பொதுத்தேர்தலில்‌ தேசிய முன்ணணி அமோகமான முறையில்‌ வெற்றி பெற்றாலும்‌, அப்துல்லாவின்‌. பதவிக்‌ காலத்தில்‌ மலாய்க்காரர்கள்‌ இடையிலான ஒற்றுமை மோசமாகச் சிதைந்தது என்றார்‌ மகாதீர்‌.

2004ஆம்‌ ஆண்டில்‌ நடைபெற்றத்‌ தேர்தலில்‌ நாடாளுன்றத்தின்‌ 219 இடங்களில்‌ 198. இடங்களில்‌ வென்று வரலாற்றுக்குரிய வெற்றியை தேசிய முன்னணி பதிவு செய்தது.

அதன்பின்‌ 2008ஆம்‌ ஆண்டில்‌ நடந்த தேர்தலில்‌ மக்களவையில்‌ மூன்றில்‌ இரண்டு பெரும்பான்மையை இழந்த தேசிய முன்னணி, பினாங்கு, கெடா, சிலாங்கூர்‌, பேராக்‌, கிளந்தான்‌' ஆகிய மாநிலங்களில்‌ ஆட்சியையும்‌ இழந்தது.

அந்தப் படுதோல்வியைத்‌ தொடர்ந்து 2009ஆம்‌ ஆண்டில்‌ அப்துல்லா பதவி துறந்த பின்னர்‌ அப்பொறுப்பை அப்போது துணைப்‌ பிரதமராக இருந்த நஜிப்‌ ரசாக்‌ ஏற்றார்‌.

அவரின்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ மலாய்க்காரர்களிடையிலான ஒற்றுமையின்மை. மேலும்‌ மோசமடைந்தது. 1எம்டிபி நிதி ஊழல் காரணமாக அம்னோவின்‌ நம்பகத்தன்மை கடுமையாகப்‌ பாதிக்கப்பட்டது என்று. இணையத்தளப்‌ பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில்‌ மகாதீர்‌ குறிப்பிட்டார்‌.

முன்பு மலாய்க்காரர்கள்‌ அனைவரும்‌ அம்னோவின்கீழ்‌ ஒன்றுபட்டு இருந்தனர்‌. அவர்களுள்‌ சமயவாதிகளும்‌ ஆங்கிலம்‌ கற்றவர்களும்‌ மலாய்‌ கற்றவர்களும்‌ அடங்குவார்கள்‌. ஆனால்‌, அம்னோவை விட்டு விலகிய நபர்கள்‌ தனித்தனியாக அரசியல்‌ கட்சிகளைத்‌ தொடங்கியிருப்பதால்‌ நான்கு அல்லது. ஐந்து கட்சிகளாக அவர்கள்‌ பிரிந்து நிற்கின்றனர்‌ என்றார்‌ அவர்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *