எனக்கு பணம் தேவைப்படுகிறது! - நஜிப்
- Shan Siva
- 31 May, 2024
கோலாலம்பூர்,
மே 31: சவூதி அரேபிய மன்னரிடமிருந்து கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படும் கோடிக்கணக்கான பணத்தை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தம் பொறுப்பில் வைத்திருந்தார் என்று உயர்நீதிமன்றத்தில்
நேற்று சாட்சியமளிக்கப்பட்டது.
கடந்த 2013ஆம் ஆண்டில் பதின்மூன்றாவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு தேசிய முன்னணி அரசாங்கம் கவிழாமல் இருப்பதை
உறுதிசெய்ய அப்பணம்
தமக்குத் தேவைப்படுகிறது என்று நஜிப் தம்மிடம் கூறியதாக மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையமான எம்ஏசிசியின்
மூத்த அதிகாரி நூர் அய்டா அரிபின் நேற்று நீதிமன்றத்தில்
சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டார்.
1எம்டிபி
நிறுவனத்திற்குச் சொந்தமான கோடிக்கணக்கான பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதன் தொடர்பான புலன்விசாரணையில் நஜிப்
என்னிடம் இதனைத்
தெரிவித்தார் என்று நூர் அய்டா கூறினார்.
கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதியன்று நடந்ததுபோன்ற “அசாதாரண
சூழ்நிலைகளைத்” தவிர்ப்பதற்காக அப்பணத்தைத் தாம் தனியாக ஒதுக்கி வைத்துள்ளதாக நஜிப் என்னிடம்
தெரிவித்ததாகவும் இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரியான நூர் அய்டா கூறினார்.
2008ஆம் ஆண்டு
பொதுத்தேர்தலுக்குப் பிறகு தேசிய முன்னணி வேட்பாளர்களை விலைக்கு வாங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால் அதனை முறியடிப்பதற்குப் பணம் தேவைப்படுகிறது. அதற்காக சவூதி மன்னரிடமிருந்து
கிடைக்கப் பெற்ற பணத்தை தனியாக வைத்திருக்கிறேன். இவ்வாறு செய்ய எனக்கு விருப்பமில்லை.
ஆனால், ஆட்சிக்.கவிழ்ப்பு
முயற்சியில் எதிர்க்கட்சியின் மீண்டும்ஈடுபடுவார்கள் எனும்
சந்தேகத்தின்பேரில் அப்பணத்தை ஒதுக்கி வைத்துள்ளேன் என்று நஜிப் என்னிடம்
தெரிவித்தார்" என்றார் நூர் அய்டா.
ஆயினும், சதித்திட்டம் எதுவும் நடக்காததால் சவூதி அரசாங்கத்தால்
நியமிக்கப்பட்ட தானோர் ஃபைனான்ஸ் கோர்ப் நிறுவனத்திற்கு அப்பணத்தைத் திருப்பியனுப்ப தாம் முடிவு செய்திருப்பதாக நஜிப் தெரிவித்ததாகவும் அந்த அதிகாரி தமது சாட்சியத்தில் சொன்னார்.
1எம்டிபி நிறுவனத்திற்குச் சொந்தமான கோடிக்கணக்கான பணத்தைக் கையாடியதாக நஜிப் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் நூர் அய்டா நேற்று சாட்சியமளித்தார். உயர்நீதிமன்றநீதிபதி
கோலின் லாரன்ஸ் செகுய்ரா
முன்னிலையில் இவ்வழக்கு
நடைபெற்று வருகிறது.
தேர்தல்
செலவுக்கோ மாற்றுத் திட்டத்திற்கோ பணத்தைச் செலவிட
வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிந்தவுடன் அப்பணத்தைத் திரும்ப ஒப்படைக்க நஜிப் முன்வந்தார். தானோர் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பதும் தமக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார் என்றார் நூர் அய்டா.
1எம்டிபி நிதியிலிருந்து 230 கோடி வெள்ளியை கையூட்டாகப் பெற்றதன் தொடர்பில் எழுபது வயதான நஜிப் மீது நான்கு அதிகாரத் துஷ்பிரயோக குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அதே அளவு பணத்தைக் கள்ளப் பரிமாற்றம்
செய்ததாக மேலும் 21 குற்றங்களையும் அவர் எதிர்நோக்கியுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *