திருமண அழைப்பிதழ்கள் மூலம் புதிய திருட்டு! பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
- Shan Siva
- 04 Jun, 2024
கோலாலம்பூர், ஜூன் 4- திருமண அழைப்பிதழ்கள் மூலம் தகவல் திருட்டில் ஈடுபடும் புதிய முறை குறித்து
பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொது
மக்களிடமிருந்து தகவல்கள் மற்றும் நிதி தொடர்பான விபரங்களைத் திருடுவதற்கு ‘மால்வேர்’
எனப்படும் தீங்கிழைக்கும் மென்பொருள் பதிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்களை சமூக
ஊடகங்கள் வாயிலாக அனுப்பும் மோசடிக் கும்பல்களால் இச்சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக
அறியப்படுகிறது.
இந்த பாணியிலான மோசடி நடவடிக்கை கடந்த 2023ஆம் ஆண்டு மத்தியில்
கண்டுபிடிக்கப்பட்டதாக புக்கிட் அமான்
வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார். விவேக கைப்பேசிகளை
ஊடுருவதற்கு இந்த தந்திரத்தை மோசடிக் கும்பல்கள் பயன்படுத்துவத்துவதாகத்
தெரிவித்தார்.
இத்தகைய செயலிகளை நாம் பதிவிறக்கம் செய்து கைப்பேசியில்
நிறுவும் பட்சத்தில், நம்மை அறியாமலே நமது
கைப்பேசித் தரவுகளை முழுமையாக ஆக்கிரமிக்கும் வாய்ப்பினை குற்றவாளிகள்
பெறுகின்றனர் என்று அவர் கூறினார்.
நமது கைபேசியில் ஊடுருவுவது மூலம் அதில் உள்ள தரவுகளை
மோசடிக் கும்பல் திருடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு அதன் வாயிலாக நாம் பண இழப்புகளை
எதிர்நோக்கும் அபாயம் உண்டாகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
ஆகவே, பொது மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கும் அதேவேளையில்
செய்திகள்,
மின்னஞ்சல்கள்
மற்றும் சமூக வலைத்தளங்கள் வழி அனுப்பப்படும் செயலி கோப்புகளைப் பதவிறக்கம்
செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் அவர் நினைவுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *