கெந்திங் மலையில் அஸாம் பாக்கி சந்திப்புக்கு அனிஸ் ரிஸானா மறுப்பு!
- Muthu Kumar
- 08 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 8-
மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியை, சுங்கக்துறை இயக்குநர்கள் கெந்திங் மலையில் சந்தித்ததாக பரவலாகக் கூறப்பட்டு வருவதை, சுங்கத்துறை தலைமை இயக்குநர் டத்தோ அனிஸ் ரிஸானா முஹமட் ஸைனுடின் முற்றாக மறுத்துள்ளார்.
அஸாம் பாக்கியுடனான அத்தகைய சந்திப்பு இம்மாதம் 6ஆம் தேதி நடந்ததாகவும் அது இன்று 8 ஆம் தேதியோடு முடிவடைய விருப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. கெந்திங் மலையில் இம்மாதம் 6ஆம் தேதி ஸ்கேப்ஸ் ஓட்டலில் தொடங்கிய ஒரு நிகழ்ச்சியானது, அரச மலேசிய சுங்கத்துறை இலாகாவின் ஒருமைப்பாடு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, அவ்விலாகாவின் 2024ஆம் ஆண்டு தேசிய ஒருமைப்பாடு கூட்டமாகும். அதில் இலாகாவின் இயக்குநர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டதாக அனிஸ் ரிஸானா தெரிவித்தார்.
“ஒருமைப்பாடு, கண்ணியமான பழக்க வழக்கங்களின் எதிர்பார்ப்பு” ANIS RIZANA என்ற கருப்பொருளைக் கொண்ட அக்கூட்டம், நவம்பர் 6ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டதாகவும் நாடு முழுமையிலும் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் மத்தியில் ஒருமைப்பாட்டு கலாச்சாரத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலானது என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த விளக்கமானது, எந்த ஒரு குழப்பம் அல்லது அடிப்படையற்ற ஆருடங்களுக்கு உடனடியாக முற்றுப் புள்ளியை வைக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கின்றேன்” என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அனிஸ் ரிஸானா தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *