QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் UM தொடர்ந்து முன்னணி!
- Muthu Kumar
- 05 Jun, 2024
QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 2025 ல் மலேசிய பல்கலைக்கழகங்களில் யுனிவர்சிட்டி மலாயா (UM) தொடர்ந்து முன்னணியில் உள்ளது.உலக அளவில் 60வது இடத்தை பிடித்து முதல் 100 இடங்களுக்குள் இருக்கும் ஒரே மலேசிய பல்கலைக்கழகம் இதுவாகும்.
QS தரவரிசையின் 21வது பதிப்பில் கடந்த ஆண்டு 65வது இடத்தில் இருந்த UM 60 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.UM கல்வி அடிப்படையில் தேசிய அளவில் சிறந்து விளங்குகிறது.
யுனிவர்சிட்டி கெபாங்சான் மலேசியா (யுகேஎம்) முன்னேறி159 வது இடத்தில் இருந்து 138 வது இடத்திலும்,நாட்டில் உள்ள மற்ற ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள் - யுனிவர்சிட்டி செயின்ஸ் மலேசியா 146வது இடத்திலும், யுனிவர்சிட்டி புத்ரா மலேசியா 148வது இடத்திலும் மற்றும் யுனிவர்சிட்டி டெக்னாலஜி மலேசியா 181வது இடத்திலும் உள்ளது.
மேலும் டெய்லரின் பல்கலைக்கழகம் மலேசியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகமாக 251 வது இடத்தைப் பிடித்துள்ளது, UCSI பல்கலைக்கழகம் 265 வது இடத்தில் உள்ளது.இந்த ஆண்டு மொத்தம் 28 மலேசிய உயர்கல்வி நிறுவனங்கள் (HEIs) தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
புதன்கிழமை இன்று ஒரு அறிக்கையில், சர்வதேச மாணவர் விகித அடிப்படையில் உலகின் முதல் 100 பல்கலைக்கழகங்களில் ஐந்து மலேசியப் பல்கலைக்கழகங்களும், சர்வதேச ஆசிரிய விகிதத்திற்கான முதல் 200 பல்கலைக்கழகங்களில் நான்கு பல்கலைக்கழகங்களும் இடம் பெற்றுள்ளதாக QS தெரிவித்துள்ளது.
"2025 ஆம் ஆண்டளவில் 250,000 சர்வதேச மாணவர்களை ஈர்க்கும் லட்சிய இலக்கை நோக்கி மலேசியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவின் பல்கலைக்கழகங்கள் கல்வியாளர்கள் மத்தியில் அதிக அங்கீகாரத்தைப் பெற்று வருவதாகவும், ஏறக்குறைய அனைத்து தரவரிசைப் பல்கலைக்கழகங்களும் ஆண்டுக்கு ஆண்டு முடிவுகளை மேம்படுத்தி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது
ஒட்டுமொத்தமாக, யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 13 வது ஆண்டிற்கான தரவரிசையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது, அதே நேரத்தில் இங்கிலாந்தின் இம்பீரியல் கல்லூரி லண்டன் இரண்டாவது இடத்தைப் பிடித்து உள்ளது. UK ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அதன் தரவரிசையை 3வது இடத்தில்தக்க வைத்துக் கொண்டுள்ளது மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் தன் இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் உலகளவில் 8வது இடத்தைப் பெற்று சமீபத்திய தரவரிசையில் உலகின் முதல் 10 இடங்களில் இடம்பெற்ற ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர் என்ற பெருமையுடன் திகழ்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *